Instagram: இன்ஸ்டாகிராமில் புதிய அம்சங்கள்- மெட்டாவின் அசத்தல் அப்டேட் என்ன தெரியுமா?
Instagram: இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் புதிய வசதிகள் பற்றிய விவரங்களை காணலாம்.
இன்ஸ்டாகிராம் மெசேஜிங் (Direct messaging (DM)) புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலமான வீடியோ ஷேரிங் தளமாக மாறிவிட்டது. பலரும் ரீல்ஸ் பார்ப்பதை விரும்புகின்றனர். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிட்ராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட மூன்று சமூக வலைதளங்களிலும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதோடு, மூன்றிலும் ஒரே மாதிரியான வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் பயன்படுத்தும் அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான வசதியை அறிமுகப்படுத்தியது.
இனி 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கள் ஆட்டோமேடிக்காக ப்ரைவேசி புரோடெக்சன் ஆக்டிவேட் ஆகிவிடும். யாரெல்லாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியும், ஃபாலோ செய்யாதவர்கள் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பவோ டேக் செய்யவோ முடியாது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான Feed ஃபில்டர் செய்யப்பட்டு பாதுகாப்புடன் தகவல்கள் டிஸ்ப்ளே செய்யப்படும். தூங்கும் நேரத்தை கூட பெற்றோர்களால் நிர்வகிக்க முடியும்.
இந்த செட்டிங்ஸ் பெற்றோர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். இதை மாற்ற வேண்டுமானால் பெற்றோர்களால் மட்டுமே முடியும் என்ற அப்டேட்டை வழங்கியிருந்தது.
இப்போது, இன்ஸ்டாகிராம் மெசேஜில் புதிய ஸ்டிக்கர், இமோஜி, செல்லப்பெயர் (Nickname) வைக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. நண்பர்கள், அன்பிற்குரியர்களுக்கு ‘Nickname' வைக்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இது ஃபேஸ்புக் மெசெஞ்சரில் உள்ளது. இது மெசேஜ் சாட் விண்டோவில் மட்டும் தெரியும். வாட்ஸப் செயலில் உள்ளது போன்ற ஸ்டிக்கர்களை இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்துள்ளது. எழுத்துகள் இல்லாமல் இமோஜி, ஸ்டிக்கர் ஆகியவற்றோடு பயனர்கள் உரையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
நிகழ்நேர இருப்பிடத்தைத் தெரிவிக்க முடியும்.
வாட்ஸப் செயலில் ஒருவர் எங்கு இருக்கிறார் என்ற ' live location’ செய்யு வசதி உண்டு. அதை இனி இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்த முடியும். ஆனால், இதை செட்டிங்ஸில் மாற்றினால் மட்டுமே லைவ் லோகேசன் பகிர முடியும். இந்த வசதி வாட்ஸப்பில் இருப்பது போல இல்லை. இன்ஸ்டாகிராமில் லைவ் லிங்க் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்டோமெட்டிக்காக எக்ஸ்பையர் ஆகிவிடும். live location வசதியை எனேபிள் செய்தால் சாட் விண்டோவில் ‘லைவ்’ என்று தெரியும்.