(Source: ECI/ABP News/ABP Majha)
McLaren India Launch | அசத்தல் வடிவமைப்பு.. அதிவேகம்.. இந்திய சந்தையில் கால்பதிக்கும் மெக்லாரென்.!
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான மெக்லாரென் ப்ரீமியம் கார் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றபோதும் நிறுவன வெளியீட்டுக்கான பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ப்ருஸ் மெக்லாரென் என்பவரால் லண்டன் நகரில் 1960களின் தொடக்கத்தில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் மெக்லாரென். ஸ்போர்ட்ஸ் வகை கார்களை தயாரிப்பதில் உலக அளவில் இந்த நிறுவனம் பிரபலம்.
மெக்லாரென் ரேஸிங் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் கடந்த 59 ஆண்டுகளில் பல ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் நேரடியாக விற்பனை செய்துவந்தபோது இந்தியாவில் இந்த நிறுவனம் நேரடியாக கால்பதிக்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டே இந்த நிறுவனம் இந்தியாவில் தனது கிளைகளை திறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆரம்ப நிலையில் தனது ப்ரீமியம் மாடல்கள் கார்களில் 4 மடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் ஏற்கனவே லம்போர்கினி, போர்ஷ், பெர்ராரி போன்ற ப்ரீமியம் கார் நிறுவனங்கள் உள்ள நிலையில் அவைகளுக்கு போட்டியாக களமிறங்கவுள்ளது மெக்லாரென் நிறுவனம். ஆரம்ப நிலையில் மெக்லாரென் ஜிடி, மெக்லாரென் அர்டுரா, 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் ஆகிய நான்கு மாடல்களை மட்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படும் 4 மாடல்கள் ஒரு பார்வை.
மெக்லாரென் ஜிடி
மெக்லாரென் ஜிடி, இந்த மாடல் காரை மெக்லாரென் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த ஒரு மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது. 7 ஸ்பீட் கியர் அமைப்புடன் டூயல் கிளட்ச் அமைப்பு கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெக்லாரென் ஜிடி மணிக்கு 326 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது என்றும் 0வில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்த வாகனத்திற்கு 3.1 நொடிகள் எடுக்கும் என்று மெக்லாரென் நிறுவனம் கூறியுள்ளது.
மெக்லாரென் அர்டுரா
மெக்லாரென் அர்டுரா, மெக்லாரென் நிறுவனத்தின் இந்த கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியப்பட்டது. தற்போது இந்த கார் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்லாரென் எஸ் கிளாஸ் ஸ்போர்ட்ஸ் மடலை சேர்ந்த இந்த கார் 8 ஸ்பீட் SSE டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜிடி மடலை போலவே இதிலும் டூயல் கிளட்ச் டெக்னாலஜி உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார் 0வில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட 2.9 நொடிகள் எடுத்துக்கொள்ளும் என்று மெக்லாரென் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெக்லாரென் 720எஸ்
மெக்லாரென் 720எஸ், கடந்த 2017ம் ஆண்டு வெளியான கார். Carbon Monocoque கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கார் இதன் முந்தைய மாடலாக 620எஸ் மாடலை விட எடை குறைவாகவும் வலுவானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மெக்லாரென் கார்களில் ButterFly கதவுகள் கொண்ட ரகத்தை சேர்ந்த இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 341 கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது. 0-வில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்த வாகனத்திற்கு 2.9 நொடிகள் தேவைப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
மெக்லாரென் 720எஸ் ஸ்பைடர்
2018ம் ஆண்டு 720எஸ் மடலின் புதிய Varientஆகா உருவாக்கப்பட்ட மாடல் தான் 720எஸ் ஸ்பைடர் என்பது குறிப்பிடத்தக்கது.