Joker Virus| ஆண்ட்ராய்ட் ஃபோன் யூசரா? ஜோக்கர் வைரஸால் இந்த பிரச்சனைகள்.. இந்த ஆப்ஸ் டெலீட் செய்யணும்
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்பொழுது அவர்களுக்கே தெரியாமல் , தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரையும் , ஜோக்கர் வைரஸையும் பிரிக்கவே முடியாது போலும், வருடா வருடம் சில அப்ளிகேஷன்களில் ‘ஜோக்கர் வைரஸின்’ ஊடுருவல் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஜோக்கர் வைரஸ் என்றாலே கூகுள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அச்சுருத்தல்தான். அதனை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. ஜோக்கர் வைரஸ் ஊடுவிய செயலியை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் , தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது. இதனை ஹேக்கர்ஸ் payload-retrieving techniques என்ற தொழில்நுட்பம் மூலம் சில code களை மாற்றி எளிதாக நுழைகின்றனர். இந்த வைரஸ் முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கூகுள் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜோக்கர் வைரஸுடன் தங்கள் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தது. ஜோக்கர் வைரஸ் தாக்கிய நரின் மொபைலுக்கு வரும் SMS,அவரின் contact list, மொபைலின் device info, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளின் OTP உள்ளிட்ட அனைத்தும் ஹேக்கர் கைக்கு சென்றுவிடும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜோக்கர் வைரஸ் ஊடுருவியதாக கூறி 40 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள் நிறுவனம் . சமீபத்திலும் கூட புகழ்பெற்ற வெப் தொடரான ஸ்குட் கேமை தழுவி, பிளே ஸ்டோரில் அறிமுகமான , அதிகாரப்பூர்வமற்ற ஸ்குட் கேம்ஸில் ஜோக்கர் செயலியின் ஊடுருவல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அந்த செயலிகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியது.
தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 14 செயலிகளை ஜோக்கர் வைரஸ் பாதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வறுமாறு
Super-Click VPN - அதிகாரப்பூர்வமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் இதன் APK file கிடைக்கிறது .
Flashlight Flash Alert on Call - உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வந்தால் அந்த சமயத்தில் மொபைலின் Flashlight ஐ இயக்கும் செயலி
Now QRCode Scan - QRCode Scan ஐ செய்துக்கொள்ளலாம் .Easy PDF Scanner - PDF ஆவணங்களாக மாற்றும் செயலி
Smart TV Remote - மொபைல் மூலம் ஸ்மார்ட் டிவியை இயக்கும் செயலி
Battery Charging Animation Bubble Effects - மொபைல் சார்ஜிங்கில் இருக்கும் பொழுது அனிமேஷன் எஃபெக்ட் கிடைக்கிறது.
Volume Boosting Hearing Aid - மொபைலின் சத்தத்தை அதிகரிக்கும் செயலி
Halloween Coloring - குழந்தைகளுக்கான கலரிங் செயலி
Battery Charging Animation Wallpaper - சார்ஜிங் செய்யும் பொழுது அனிமேஷன் திரையை கொடுக்கும்.
Dazzling Keyboard - இதன் மூலம் உங்களுக்கான டைப்பிங் பேடை நீங்களே உருவாக்கலாம்.
EmojiOne Keyboard -மெசேஜ் செய்வதற்கான கூடுதல் எமோஜிகளை தருகிறது
Classic Emoji Keyboard - இது மெசேஜ் செய்வதற்கான 300 க்கும் மேற்ப்பட்ட எமோஜிகளை தருகிறது.
Volume Booster Louder Sound Equalizer - ஆண்ட்ராய்ட் மொபைலின் ஆடியோ தரத்தை உயர்த்த பயன்படுகிறது.
Super Hero-Effect - மொபைலுக்கு ஸ்பெஷல் எஃபெக்டை தருகிறது.