Reliance Jio: கிரிக்கெட் ரசிகர்களே! ஜியோவின் புதிய ரீசார்ஜ் ப்ளான் - என்ன தெரியுமா?
Jio Hotstar: ஜியோ வெளியிட்டுள்ள புதிய ரீசார்ஜ் திட்டம் பற்றிய விவரங்களை காணலாம். ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்சனுடன் கிடைக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் புதிய ரீசார்ச் ப்ளானை அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி செயலியை அண்மையில், 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு முகேஷ் அம்பானி வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை ஒரே ஸ்ட்ரீமிங் தளமாகத் தக்கவைத்துக் கொள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாற்றியுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா:
ஐ.பி.எல். 18-வது சீசனில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை தனது முதல் லீக் போட்டியிலேயே மும்பை அணியுடன் மோதுகிறது; போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
மார்ச் 28 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னையின் இரண்டாவது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஹைதராபாத்திலும் குவாலிபையர, 2 மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ஐ.பி.எல்., ப்ளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மே, 2-ம் தேதி - குவாலிபையர் 1, மே, 21 -ம் தேதி - எலிமினேட்டர்,மே,23 -ம் தேதி -குவாலிபையர் 2, மே, 25-ம் தேதி - இறுதிப்போட்டி என ஐ.பி.எல். தொடர் நிறைவு பெறுகிறது.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடர், மகளிர் கிரிக்கெட் லீக், ஐ.பி.எல். ஆகிய கிரிக்கெட் தொடர்களை நேரடியாக காண ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. மே மாதம் வரை ஐ.பி.எல். திருவிழா நடக்கும். ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகும். அதற்கென தனியே 'Data add On' ஒன்றை ஜியோ புதிதாக வெளியிட்டுள்ளது.
ஜியோ புதிய இண்டர்நெட் ப்ளான் விவரம்:
ஜியோ வெளியிட்டுள்ளதன்படி, ரூ.195 (Cricket Data Pack) ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 15 GB டேட்டா வசதியை வழங்குகிறது. இதோடு, ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்சன் உடன் இந்த ரீசார்க் ப்ளான் வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஹாட்ஸ்டார் கொடுக்கப்பட்டுள்ளது. 720p ரெசொல்யூசனில், ஸ்மாட்ஃபோன், டேப்லட் என ஒரு டிவைஸில் மட்டும் பார்க்கலாம். மொபைல் ப்ளான் கொடுத்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ப்ளான் மொபைல்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.149/- க்கு கிடைக்கிறது. ஜியோ ரீசார்ஜில் கூடுதலாக ரூ.46 செலுத்தினால் 4G /5G ஸ்மாட்ஃபோன் பயன்படுத்துவர்களுக்கு இது பயனுள்ள திட்டமாக இருக்கும். 15 GB டேட்டாவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும்.
ஜியோ அறிவித்துள்ள மற்றொரு ப்ளானிலும் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.949 ப்ளானில் 84 நாட்களுக்கு 2 GB/ Day என்ற முறையில் 128 GB டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், 100 SMS / Day உடன் மொபைல் ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கிறது. ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் இந்தப் ப்ளானை தேர்வு செய்யலாம். ஏற்கனவே ஆக்டிவ் ப்ளான் இருக்கிறதே என்பவர்கள், ஜியோவின் ரூ.195 டேட்டா ப்ளானை தேர்வு செய்யலாம்.
மேலும் வாசிக்க..
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
IPL 2025: கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகுது! சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகள் விவரம் இங்கே!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

