Chandrayaan-2: மோதும் நிலைக்குச் சென்ற சந்திராயன் 2- கொரிய ஆர்பிட்டர்: சமயோசிதமாக செயல்பட்ட இஸ்ரோ.! நடந்தது என்ன?
Chandrayaan 2-Korean Lunar: இஸ்ரோ தனது சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கும் தென் கொரியாவின் பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டருக்கும் இடையிலான மோதலானது தவிர்க்கப்பட்டுள்ளது.
நிலவைச் சுற்றி வரும் சந்திராயன் 2 ஆர்பிட்டரானது, கொரிய ஆர்பிட்டர் மீது மோதுவது தவிர்க்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது ? எப்படி தவிர்க்கப்பட்டது என பார்ப்போம்.
சந்திராயன் 2 :
கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 செயற்கைக்கோளை, இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது. சந்திரயான்-2 செயற்கைக்கோளானது நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலத்தில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், நிலவில் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறால் ரோவர் செயல்படாமல் போனது. இதையடுத்து, ஆர்பிட்டர் மட்டும் நிலவை வெற்றிகரமாக நிலவைச் சுற்றி வருகிறது. மேலும் , நிலவு தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்தும், பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த தருணத்தில் , தென் கொரியாவுக்குச் சொந்தமான பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டரும் , நிலாவைச் சுற்றி வந்து , பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரே சுற்றுவட்டப்பாதை:
இந்நிலையில், சமீபத்தில் இஸ்ரோ ஆர்பிட்டரானது, கொரிய ஆர்பிட்டர் மீதான மோதலானது தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கும், நிலவுக்கு மேலே உள்ள கொரிய பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டருக்கும் (கேபிஎல்ஓ) இடையே மோதலில் இருந்து விலகியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான தகவல் தெரிவிப்பதாவது, இந்தியாவின் சந்திராயன் 2 ஆர்பிட்டரும், தென் கொரியாவைச் சேர்ந்த ஆர்பிட்டரும் , ஒரே சுற்றுவட்டபாதையில் இணைந்து மோதுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் , அந்த மோதலானது அக்டோபர் 1 ஆம் தேதி நிகழக்கூடும் எனவும் கணிக்கப்படது.
Also Read: Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் வானியல் நிகழ்வு
மோதல் தவிர்ப்பு
இதையடுத்து, சுதாரித்த கொண்ட இஸ்ரோ நிறுவனம், முன்கூட்டியே மோதலை தவிர்க்க திட்டமிட்டது. இதனை தொடர்ந்து , கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி , சந்திராயன் 2 ஆர்பிட்டரை சற்று வேறு பாதைக்கு பயணிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் , இஸ்ரோ நிறுவனத்திலிருந்து, நிலவின் பாதையை சற்று வேறுவகையில் திருப்பி, வெற்றிகரமாக பயணிக்க வைத்தனர், இஸ்ரோ விஞ்ஞானிகள்.
இதனால் , இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு செயற்கைகோள்களின் மோதலானது தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இஸ்ரோ, சரியான நேரத்தில் கண்டறிந்து, உடனடியாக மோதலை தவிர்த்தது. இல்லையென்றால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என கூறப்படுகிறது.