Whatsapp status-களில் வரும் நமக்கு பிடித்த வீடியோக்களை, இவ்வளவு ஈஸியா டவுன்லோட் பண்ணலாமா?
பல வீடியோக்கள், பாடல்கள், வசனங்கள், GIF-களை ஸ்டேட்டஸாக வைத்து அசத்துவார்கள். Whatsapp status-களில் வரும் நமக்கு பிடித்த வீடியோக்களை, இவ்வளவு ஈஸியா டவுன்லோட் பண்ணலாமா?
வாட்ஸ் அப்பில் status வைப்பது என்பது டிரெண்டாகி வரும் நிலையில், நமக்கு பிடித்த நமது நண்பர்களின் வீடியோக்களை வெறும் 5 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் உள்ளன. இதனைப்பயன்டுத்தி இனி எளிமையாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திக்கொள்ளக்கொள்ளலாம்.
இன்றையச் சூழலில் பெரும்பான்மையான மக்கள் ஆன்ட்ராய்ட் போன்கள் உபயோகிப்பது மட்டுமில்லாமல் வாட்ஸ் அப் செயலியினை பயன்படுத்தாமல் யாரும் இருக்கமாட்டார்கள். இதன் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தொடங்கி, அலுவலக ரீதியான வேலைகள் முதல் தற்பொழுது ஆன்லைன் வகுப்புகளுக்கும் இந்த வாட்ஸ் அப் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் இதன் மூலம் தகவல் பரிமாற்றம் மட்டும் இல்லாமல், வாட்ஸ் அப்பில் status வைப்பது என்பது டிரெண்டாகி வருகிறது. இதில் நம்முடைய பலர் பல வீடியோக்கள், பாடல்கள், வசனங்கள், GIF-களை ஸ்டேட்டஸாக வைத்து அசத்துவார்கள். குறிப்பாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸை நாம் அனுமதிப்பதைப் பொறுத்து நம்முடைய contact லிஸ்டில் இருப்பவர்கள் மட்டும் இல்லாது யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய வசதிகள் உள்ளன. இந்நிலையில் சிலவற்றைப் பார்த்தவுடன் நாமும் இந்த வீடியோவினை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் status னை டவுன்லோடு எப்படி செய்வது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்நேரத்தில் ஆன்ட்ராய்டு மொபைல் போனிலிருந்து மற்றவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸினை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
-
Whatsapp status ல் நமக்கு பிடித்த மற்றவர்களின் வீடியோவினை டவுன்லோடு செய்யும் வழிமுறைகள்:
.படி 1: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் google play store ல் இருந்து Google Files-ஐ பதிவிறக்கவும்.
படி 2: அதன் பிறகு google files என்ற செயலியினைத்திறந்து, அதில் மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைக் கிளிக் செய்யவும்.
படி 3: பின்னர், Settings ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 4 “show hidden files”” விருப்பத்திற்கு மாற்று என்பதை கிளிக் செய்யவேண்டும்.
படி 5: அதன்பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனின் File manager என்ற ஆப்சனுக்குச் செல்லவேண்டும்.
படி 6: அதனையடுத்து Internal Storage > WhatsApp > Media >Status என்பதைக் கிளிக் செய்க
படி 7: அந்தப் போல்டரில் (folder), நீங்கள் பார்த்த ஸ்டேட்டஸை சரிபார்க்க முடியும். பின்னர் நீங்கள் தேடும் புகைப்படம் / வீடியோவைக் கிளிக் செய்துக்கொள்ள வேணடும்.
படி 8: இறுதியாக நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஸ்டேட்டஸ் வீடியோவை நீண்ட நேரம் அழுத்தி (long press) அதை நீங்கள் விரும்பிய இடத்தில் சேமிக்கமுடியும்.
இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றி மிகவும் எளிமையாக நம்முடைய நண்பர்கள் வைத்துள்ள நமக்கு பிடித்த வாட்ஸ் அப் ஸ்டோட்டலின் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்