Iphone satellite : ஐஃபோன் 14 கூட சாட்டிலைட் கம்யூனிகேஷன் அம்சங்களா? மக்களே உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்..
ஆப்பிள் குளோபல்ஸ்டார் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ஐபோன் 14 க்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வரவிருக்கும் ஐபோன் 14 சீரிஸுடன் செயற்கைக்கோள் இணைப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராக உள்ளது. குபெர்டினோ செயற்கைக்கோள் இணைப்புக்கு தேவையான ஹார்ட்வேர் சப்போர்ட்டை இந்த சீரிஸ் கொண்டுள்ளது, ஆனால் ஐபோன் 14 செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை சப்போர்ட் செய்யுமா என்பது ஆப்பிள் மற்றும் அதன் ஆபரேட்டர்கள் வணிக மாதிரியை முடிவு செய்ய முடியுமா என்பதைப் பொறுத்தது. இந்த முடிவானது தேவையான அரசாங்க ஒப்புதல்களையும் சார்ந்தது.
ஆப்பிள் குளோபல்ஸ்டார் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ஐபோன் 14 க்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பிரபல ஆய்வாளர் மிங் சி குவோவின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் தங்கள் ஐபோன் 14 சீரிஸுக்கான செயற்கைக்கோள் இணைப்பை உருவாக்குவதற்கும் சோதனை செய்வதற்கும் குளோபல்ஸ்டார் நிறுவனத்தையே நீண்டகாலத்துக்குத் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
இந்த செயற்கைக்கோள் வசதியுடன் செல்லுலார் சேவை இல்லாத பகுதிகளில் ஐபோன் பயனர்கள் அவசரநிலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும். செயற்கைக்கோள் இணைப்பு அம்சம் பயனர்கள் அவசரகாலத்தில் குறுகிய செய்திகளை அனுப்ப அனுமதிக்கும்.
ஐபோன் 13 சேட்டிலைட் இணைப்பிற்கான ஹார்ட்வேர் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது, மேலும் இது ஐபோன்களை 4ஜி அல்லது 5ஜி நெட்வொர்க் இணைப்பு தேவையில்லாமல் இயங்க அனுமதிக்கும்.
ஐபோன் 14 சீரிஸ் செப்டம்பர் 7ம் தேதி ஆப்பிளின் "ஃபார் அவுட்" நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்படும்.