iPhone 13 | மாஸ்க் மாட்டினாலும் ஒகே தான்.. ஃபேஸ் ஐடியில் மாஸ் செய்யும் ஐபோன்! புதிய வரவு எப்படி?
ஆப்பிள் இந்த மாதம் ஐபோன் 13 மொபைல் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆப்பிள் இந்த மாதம் ஐபோன் 13 மொபைல் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது வந்த ஒரு புதிய அறிக்கையில், வரவிருக்கும் மாடல் லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள் தகவல்தொடர்பு இணைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது, இது பயனர்களை அழைப்புகள் மற்றும் செய்திகளை வேகமாக, இன்னும் தெளிவாக செயல்பட அனுமதிக்கிறது. ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஐபோன் 13 மாடலில் LEO அல்லது குறைந்த பூமி-சுற்றுப்பாதை செயற்கைக்கோள் தொடர்பு முறை இருக்கும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்போது பயனர்கள் நெட்வொர்க் இல்லாமல் கூட அழைப்புகள் மற்றும் செய்திகளை எடுக்க முடியும்.
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் பேசுகையில், வரவிருக்கும் ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த செயற்கைக்கோள் அம்சத்தைப் பெறும் என்றும் அது குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. LEO செயற்கைக்கோள்கள் இணையத்தை இயங்க செய்யும், குறைந்த சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள்களே இதன் இயங்குதளம். இந்த செயற்கைக்கோள்களின் மிகவும் பிரபலமான பயனர்களில் ஒருவர் ஸ்டார்லிங்க் - எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை. ஆப்பிள் தனது LEO SATELLITE X IPHONE செயலாக்கத்தை 2019 இல் தொடங்கியது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன்களுக்கான தரவை பீம் செய்ய 2019 ஆம் ஆண்டு அறிக்கையில் ப்ளூம்பெர்க் முதலில் அறிக்கை செய்தார். இருப்பினும், இந்த அம்சம் சேவைக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை, அதுவும் 2021 iPhone 13 வரிசையில் தொடங்க உள்ளது.
குர்மன் பேசுகையில், " தற்போதைக்கு அந்த வசதியை எல்லோருக்கும் வழங்குவது சாத்தியமில்லை, அத்தகைய அம்சத்தைத் தொடங்குவதற்கு ஹார்டுவேர் தாயார் செய்ய போதிய நேரம் இல்லை, விலையும் அதிகம் மற்றும் அது ஆப்பிள் நம்பியிருக்கும் தொலைபேசி கேரியர்களிடமிருந்து எதிர்ப்பை உண்டுசெய்யும்." என்றார்.
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸின் கீழ், ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவற்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஊடக அறிக்கையின்படி, இந்த முறை ஐபோன் 13 இன் ஃபேஸ் ஐடி அம்சத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் இதில் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது, இதன் கீழ் பயனர்கள் மாஸ்க் அணிந்திருந்தால் கூட மொபைலை திறக்க முடியும். மேலும், மூடுபனி அல்லது வெயிலில் யாராவது கண்ணாடி போட்டிருந்தாலும், தொலைபேசி பயனரின் முகத்தை அடையாளம் கண்டு தொலைபேசியைத் திறக்கும்.
அதிகாரப்பூர்வமின்றி வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 சீரிஸ் mmWave 5G தொழில்நுட்பம் கொண்டுள்ளது. பல நாடுகள் இந்த ஆண்டிற்குள் mmWave 5G கவரேஜ் பெறத் தொடங்கும், இதனால் பயனர்கள் ஐபோன் 13 மூலம் அதிவேக 5G இணைப்பை அனுபவிக்க முடியும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 க்கான புதிய வாட்ச் ஃபேசிலும், ஆப்பிள் புதிய வேலைகள் செய்வதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு சிறிய S7 சிப் கொடுக்கப்படலாம், இது ஒரு பெரிய பேட்டரி அல்லது பிற கூறுகளுக்கு அதிக இடத்தை அளிக்கிறது. இந்த சிப்செட் தைவானின் ASE தொழில்நுட்பத்தால் செய்யப்படும். இந்த கடிகாரத்தில் பல புதிய வாட்ச் ஃபேஸ் காணப்படுகின்றன.