ஸ்மார்ட்டாக மாறும் இந்தியர்கள்! ஸ்மார்ட்வாட்சில் சீனாவை தட்டித்தூக்கிய இந்தியா! விவரம் இதுதான்!
Noise மற்றும் Fire Boltt போன்ற உள்ளூர் பிராண்டுகளின் உலகளாவிய சந்தைப் பங்கே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சீனாவை வீழ்த்தி இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை இந்தியா :
பணவீக்கம் மற்றும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை போன்ற நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் இந்தியா சீனாவை வீழ்த்தி உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியின் இரண்டாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது. உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் சந்தையின் ஏற்றுமதி 13 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. Counterpoint Research இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவின் ஸ்மார்ட்வாட்ச் சந்தை சீனாவை விட 300 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. Noise மற்றும் Fire Boltt போன்ற உள்ளூர் பிராண்டுகளின் உலகளாவிய சந்தைப் பங்கே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தைகளில் அதிக அளவில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மார்கெட்டை கொண்டுள்ளது. அடுத்தடுத்த நிலையில் Samsung மற்றும் Huawei உள்ளன.
சீனாவின் சரிவுக்கு காரணம் :
சீனாவில் கொரோனா தாக்கம் , ரஷ்யா - உக்ரைன் போர் , ஊரடங்கு உள்ளிட்ட அடுத்தடுத்த பிரச்சனை காரணமாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியின் ஏற்றுமதி 10 சதவிகிதம் , 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் சீனாதான் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. தொடர்ந்து முதலிடத்தில் வட அமெரிக்கா இருக்கிறது. நான்காவது இடத்தில் ஐரோப்பா இருக்கிறது.
இரண்டாவது காலாண்டில் நிறுவனங்கள்:
ஆப்பிள்
ஆப்பிளின் ஏற்றுமதி ஆண்டுக்கு 8 சதவீதம் அதிகரித்தாலும், புதிய மாடல்கள் சந்தையில் அதிக கவனம் பெறவில்லை.
சாம்சங்
40 சதவிகிதம் வளர்ச்சியுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டது சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் . வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில், கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸின் மவுசும் இதற்கு ஒரு காரணம் .
ஹூவாய்:
ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் சொந்த நாடான சீனாவில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தைகளில் இரண்டாவது இடத்தை பெறுவது தற்போது கடினம் என கூறப்படுகிறது.
ஃபயர்-போல்ட் :
ஃபயர்-போல்ட் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவுசெய்தது, ஏனெனில் இது இந்திய சந்தையில் காலாண்டு ஏற்றுமதியின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்தது.
நாய்ஸ் :
நாய்ஸ் ஆண்டுக்கு 298 சதவீதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இது இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் பிரபலமடைந்தது.
Xiaomi
Xiaomi இன் ஏற்றுமதி அதன் சந்தைப் பங்கில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
கார்மின்
கார்மின் இரண்டு இடங்கள் சரிந்து, முந்தைய ஆண்டை விட இப்போது 7வது இடத்தில் உள்ளது.
Amazfit
சீனா சந்தையில் பொருளாதார சரிவு காரணமாக Amazfit இன் ஏற்றுமதிகள் ஆண்டுதோறும் 11 சதவீதம் சரிவைக் கண்டன, ஆனால் இந்தியாவில் 65 சதவீதம் வளர்ச்சியடைந்தது.