Whatsapp Voice Call: வாட்ஸ் அப் வாய்ஸ்கால் பேசுறவங்களா நீங்கள்? இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் போது அது உறிஞ்சும் டேட்டா நுகர்வு எவ்வாறு குறைப்பதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றுங்கள்!
இப்போது ஸ்மார்ட்போன் இல்லாத மக்கள் என்று யாருமே இல்லை. அதிலும், அவர்கள் உபயோகிக்கும் சில முக்கிய செயலிகளில் வாட்ஸ்அப் செயலையும் ஒன்று. அதிலும் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் ஒரு உயிர்நாடியாகும். மேலும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்பவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீட்டில் இருந்தபடியே செல்போன் உதவியோடு தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் வாட்ஸ்அப் சேவை மிக அதிகமாக தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம்மில் பெரும்பாலோரை வீட்டிலிருந்தே வேலை செய்யச் செய்துள்ளது, வீட்டில் இருந்தபடியே அன்பிற்கு உரியவர்களிடம் பேசிப்பழக வைத்துள்ளது.
அதாவது மிகவும் அத்தியாவசியமான வேலைகளுக்கு மட்டுமே நாம் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது WFH பாணியிலான வேலைக்காக மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கும் இண்டர்நெட்டை பெரிதும் நம்பியிருப்பதை அதிகரித்துள்ளது. தினமும் எக்ஸ்ட்ராவா டேட்டா பேக் போடும் தேவை உங்களுக்கு உள்ளதென்றால்... உங்களுக்கே தெரியாமல் எதோ ஒரு வழியாக உங்கள் மொபைல் டேட்டா வீணாய் போகிறது என்று தான் அர்த்தம். இப்படியாக மொபைல் டேட்டா வீணாய் கரைய ஒரு ஸ்மார்ட்போனில் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு முக்கியான ஓட்டை... வாட்ஸ்அப்பில் உள்ளது. ஒருவேளை நீங்கள் மணிக்கணக்கில் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யும் பழக்கம் கொண்டவர் என்றால் நீங்கள் தவறாமல் தெரிந்த வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு வாட்ஸ்அப் ரகசியம் உள்ளது. அது அழைப்புகளின் போது டேட்டா நுகர்வை குறைக்க உதவுகிறது.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான குறுஞ்செய்தி அனுப்பும் தளம் உலகில் மிகவும் பொதுவான செய்தியிடல் ஆப்பாக இருக்கிறது. ஏனெனில் இது மக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இணைக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள தினமும் வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் தேவைப்படுவதை விட சற்று அதிகமான டேட்டாவை உபயோகிக்கின்றன. மேலும் போனின் பேட்டரி குறைவதற்கு இது மேலும் வழிவகுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை உபயோகிக்கும் போது அதன் டேட்டா நுகர்வு குறைக்க ஒரு வழி இருக்கிறது. உங்களின் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் போது அது உறிஞ்சும் டேட்டா நுகர்வு எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
அதனை செய்வதற்கான வழிமுறைகள்:
- இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
- ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும், பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
- அங்கே Storage and Data என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அங்கே Use less data for calls என்கிற Toggle டீபால்ட் ஆக டிஸேபிள் ஆகி இருக்கும், அதை Enable செய்யவும், அவ்வளவுதான்!
பின் குறிப்பு: iOS பயனர்களும் மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளைப் பின்பற்றவும், ஆனால் நீங்கள் நேரடியாக ஐபோனில் உள்ள வாட்ஸ்அப்பின் ஹோம் ஸ்க்ரீன் வையாக செட்டிங்ஸ்ற்குச் செல்லலாம்.