வாட்சாப் மூலம் வங்கிக் கணக்கில் சேமிப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?
வாட்சாப் நிறுவனம் UPI மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிவித்தது வாட்சாப் செயலியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்புத் தொகையையும் அறிந்து கொள்ளலாம்.அறிவது எப்படி?
இண்டர்நெட் காலத்தில் பலரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வரும் சூழலில், வாட்சாப் செயலி பலரது ஸ்மார்ட்போன்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மெசேஜ்கள் அனுப்புவதற்கும், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகியவற்றை நண்பர்களிடமும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்சாப் செயலி மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது. வர்த்தகப் பயன்பாட்டுக்கும் வாட்சாப் பிசினஸ் என்ற சிறப்பம்சம் பயன்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, வாட்சாப் நிறுவனம் UPI அம்சத்தைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிவித்தது. ஏற்கனவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த Google Pay, Paytm முதலான செயலிகள் இந்த வடிவத்தில் பயன்பட்டு வருகையில், வாட்சாப் செயலியைப் பயன்படுத்தி, எளிதான முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்துவதற்குப் பயனாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை வாட்சாப் செயலியோடு இணைக்க வேண்டும். மேலும், வாட்சாப் செயலியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்புத் தொகையையும் அறிந்து கொள்ளலாம். இதனை அறிவது எப்படி?
Settings பயன்படுத்தி எவ்வளவு சேமிப்பு இருக்கிறது என்பதைப் பார்ப்பது எப்படி?
வாட்சாப் செயலியைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பை சோதனை செய்ய இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. முதலில், Settings ஆப்ஷனில் எப்படி சோதனை செய்வது என்று காண்போம்.
1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்சாப் செயலிக்குள் சென்று, மேல் பக்கம், வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மூன்று புள்ளிகள் Settings ஆப்ஷனைக் குறிக்கும். அதனை அழுத்த வேண்டும்.
2. அதில் `Payments' என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குள் நுழைந்து, உங்களுக்குத் தேவையான வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யவும்.
3. அதனுள் சென்று, 'View Account Balance' என்பதற்குள் சென்று, PIN நம்பரைச் செலுத்த வேண்டும்.
4. PIN நம்பர் செலுத்தியவுடன், உங்கள் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் சேமிப்புத் தொகை உங்களுக்குக் காட்டப்படும்.
பிறருக்குப் பணம் அனுப்பும் போது, சேமிப்புத் தொகையைப் பார்ப்பது எப்படி?
வாட்சாப் செயலி மூலம் பிறருக்குப் பணம் அனுப்பும் போது, உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள சேமிப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும். அதனை எவ்வாறு செய்வது என்று தொடர்ந்து பார்க்கலாம்.
1. பணப் பரிவர்த்தனையின் போது, உங்களுக்குக் காட்டப்படும் ஸ்க்ரீனில், உங்களிடம் இருக்கும் available payment method என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அதற்கு அடுத்ததாக, எந்த வங்கிக் கணக்கிலுள்ள சேமிப்புத் தொகையைப் பார்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதனுள் சென்று, 'View Account Balance' என்பதற்குள் சென்று, PIN நம்பரைச் செலுத்த வேண்டும்.
4. உங்கள் சேமிப்புத் தொகை உங்கள் ஸ்க்ரீனில் காட்டப்படும்.