(Source: ECI/ABP News/ABP Majha)
Tech Tips 2 | இப்படி செய்தால் உங்கள் ட்விட்டர் தப்பிக்கும்..! ஃபாலோ பண்ணவேண்டிய சில டிப்ஸ்!
ட்விட்டர் கணக்கை பத்திரமாக கையாளுவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்..
சோஷியல் மீடியாவில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பேஸ்புக் ஒரு ரகம் என்றால், இன்ஸ்டா ஒரு ரகம். பேஸ்புக்கில் கருத்துகளை பதிவிட்டு பக்கம் பக்கமாக ரைட்டப் போடலாம். ஆனால் இன்ஸ்டா என்றால் புகைப்படங்களும் வீடியோக்களுமே. அப்படியாக ட்விட்டர் பக்கம் ஒதுங்கினால் பொழுதுபோக்கு என்பது குறைவாகவும், தகவல், விவாதம், செய்திகள் அப்டேட் போன்ற விஷயங்களும் அதிகமாக இருக்கும்.
அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ட்விட்டரில் ஆக்டீவாக இருப்பார்கள். நல்லதோ, கெட்டதோ அனைத்துவிதமான செயல்பாடுகளும் ட்விட்டரில் விவாதிக்கப்படுவதும், ட்ரெண்டு செய்யப்படுவதும் உண்டு. அப்படியான ட்விட்டர் கணக்கு உங்களிடமும் இருந்தால் சற்று பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். சற்று அசந்தால், எளிதாக ஹேக் செய்யப்பட்டு உங்கள் பெயரில் தேவையற்ற சர்ச்சையான கருத்துகளை பதிவிட வாய்ப்புள்ளது. எனவே ட்விட்டர் கணக்கை பத்திரமாக கையாளுவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்..
இரண்டு அடுக்கு பாதுகாப்பு.. (Two-factor authentication (2FA))
2FA என்று அழைக்கப்படும் இந்த பாதுகாப்பு முறை பொதுவாக அனைத்து சோஷியல் மீடியாவிலுமே உண்டு. இரண்டு கதவுகளை தாண்டி வீட்ட்டுக்குள் செல்வது போன்ற பாதுகாப்புமுறை தான் இது.
பாஸ்வேர்ட் ரீ செட் பாதுகாப்பு..
நீங்கள் பாஸ்வேர்டை ரீ செட் செய்யும்போதெல்லாம் உங்கள் மெயில் ஐடி, போன் நம்பரை கேட்டு உறுதிப்படுத்தியே ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாஸ்வேர்ட் ரீ செட் பாதுகாப்பு முறையை நாம் ஆன் செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவ்வளவு எளிதில் யாருமே ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் செய்ய முடியாது.
மர்ம மெசேஜ்கள்...
இதைனை க்ளிக் செய்யுங்கள், இந்த அக்கவுண்டில் லாக் இன் செய்யுங்கள், இந்த மெசேஜை ஓபன் செய்யுங்கள் என எந்த கட்டளையும் ட்விட்டர் கொடுக்காது. அப்படி எதேனும் லிங்க் உங்களுக்கு வந்தால் அமைதியாய் கடந்து சென்றுவிட வேண்டும்,. அது உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்ய விரிக்கப்படும் வலையாக இருக்கலாம்.
உங்கள் ட்வீட்டை பாதுகாக்கலாம்.. (Protected Tweets)
யார் வேண்டுமானாலும் உங்கள் ட்வீட்டை பார்த்து ரியாக்ட் செய்ய முடியும் என்பதை தவிர்க்கவே இந்த Protected Tweets. இதன் மூலம் உங்களை பாலோ செய்பவர்கள் மட்டுமே உங்கள் ட்வீட்டை பார்க்கவோ ரியாக்ட் செய்யவோ முடியும். இதுவும் முக்கிய பாதுகாப்பான முறைதான்.
லொகேஷன் ஷேரிங்.. (Location sharing)
எப்போதும் உங்கள் லொகேஷனை ஷேரிங்கில் வைத்திருக்க தேவையில்லை. தேவையின்றி உங்கள் தகவல்களை, இருப்பிடத்தை அடிக்கடி பகிற வேண்டாம்
போட்டோ டேக்கிங் வேண்டாம்... (Turn off photo tagging)
யார் வேண்டுமானாலும் உங்களது பெயரை போட்டோக்களில் டேக் செய்ய முடியும் என்பது வேண்டாம் என்றால் photo tagging முறையை ஆஃப் செய்யலாம். அல்லது பாலோ செய்பவர்கள் டேக் செய்யும் முறையையும் குறைத்துக் கொள்ளலாம்.
அன்ஃபாலோ.. (Unfollow)
தேவையற்றவர்களை அன் பாலோ செய்ய பழகுங்கள். ஒரு குறிப்பிட்ட கணக்கிலிருந்து வரும் ட்வீட்களில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் கணக்கும் உங்களுக்கு தேவையில்லை.
இன்பாக்ஸ் கவனியுங்கள்..
DM என்று சொல்லக் கூடிய Direct Messages ஐ கவனித்துக் கொள்ள வேண்டும். யாரிடம் இருந்து மெசேஜ் வர வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.
உங்கள் ரிப்ளை.. உங்கள் உரிமை..
உங்களது ட்வீட்டுக்கு வரும் தேவையற்ற ரிப்ளையை தவிர்த்தல், தேவையற்ற லிங்குகளை மறைத்தல் போன்ற சில சின்ன சின்ன வேலைகள் உங்களது ட்விட்டர் அக்கவுண்டை பாதுகாக்கும்
Also Read | TASMAC Holiday: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - சரக்குகளை அள்ளிய குடிமகன்கள்..