TASMAC Holiday: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - சரக்குகளை அள்ளிய குடிமகன்கள்..
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படுவதால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து வந்தனர்.
![TASMAC Holiday: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - சரக்குகளை அள்ளிய குடிமகன்கள்.. TASMAC Declared Holiday 4 days February TN Urban Local Body Election Boozers crowd Tasmac liquor shop TASMAC Holiday: இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - சரக்குகளை அள்ளிய குடிமகன்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/19d21d8b5282877f7a39ae57ce65acc9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. இதனால் முன்னமே மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளும் வண்ணமாக, மதுப்பிரியர்கள் கூட்டமாக கூட்டமாக மதுபான பாட்டில்களை வாங்க டாஸ்மாக் மதுபான கடைகளில் குவிந்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதன்காரணமாக 2 நாட்களுக்கு முன்னதாகவே மதுபான கடைகள் அடைக்கப்பட இருந்ததால், மதுப் பிரியர்கள் முன்னதாகவே மதுபானங்களை வாங்கி வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகமும் போதுமான அளவும் மதுபானங்களை அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்க வலியுறுத்தியிருக்கிறது.
Local Body Election | ’கோவையில் முகாமிட்டுள்ள கரூர்க்காரர்களை வெளியேற்ற வேண்டும்’ - வானதி சீனிவாசன்
இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்
அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவே அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள்
நேற்று மதியம் 12 மணிக்கு கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். கடை திறந்த உடன் அங்கிருந்து, மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள் இரு சக்கரவாகனங்களிலும், கார்களிலும் சென்று மதுபானங்களை மொத்தம் மொத்தமாக வாங்கி சென்றனர்.
குறிப்பாக சென்னையில் இருக்கும் பெரும்பான்மையான கடைகளில், கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைக்கட்டுப்படுத்த சில கடைகளில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். இயல்பான நேரங்களில் 80 கோடி வரைக்கும் மது விற்பனையாவது வழக்கமாக இருக்கிறது. இன்று முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் கடைகள் அடைக்கப்படுவதால் இன்றைய தினம் மதுபானவிற்பனை 200 கோடியை தாண்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)