Google Maps: பிரைவசி முக்கியம்; கூகுள் மேப்பில் வெளியாகும் புதிய அப்டேட்! விரைவில்...
Google Maps: கூகுள் மேப்ஸில் விரைவில் வெளியாக இருக்கும் புதிய வசதியை பற்றி இங்கே காணலாம்.
![Google Maps: பிரைவசி முக்கியம்; கூகுள் மேப்பில் வெளியாகும் புதிய அப்டேட்! விரைவில்... Google brings important privacy update to Maps here's what it means for you Google Maps: பிரைவசி முக்கியம்; கூகுள் மேப்பில் வெளியாகும் புதிய அப்டேட்! விரைவில்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/f849313f2a9ce180d1be685a7e3618411717654676199333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூகுள் மேப் புதிய அம்சத்தை வெளியிட உள்ளது. தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த அப்டேட் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் புதிய இடத்திற்கோ அல்ல்து ஊருக்கோ செல்வதென்றால் ‘ஏதும் தெரியதே!” என்ற கவலையை இல்லாமல் ஆக்கியது கூகுள் மேப்ஸ். கூகுள் மேப்ஸ் துணையோடு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது. சிறிய சிறிய தெருக்களை கூட கூகுள் மேப்ஸில் இருக்கும். உலகம் முழுவதும் கூகுள் மேப்ஸ் செயலி பிரபலம். பயனர்களின் வசதிகக்காக பல மொழிகளிலும் கிடைக்கிறது.
பயனர்களின் தகவல் பாதுகாப்பு
கூகுள் தங்கள் பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.அந்த வகையில்,சமீபத்திய தகவல்களின் படி, கூகுள் மேப்ஸ் தேடப்படும் இடங்களில் அல்லது பகுதிகளின் வரலாறு விவரங்களை இனி கூகுள் சர்வரில் சேமிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் ஹிஸ்ரி பயனர்களின் ஸ்மாட்ர்போன் அல்லது டிவைஸ்களில் ஸ்டோர் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இது அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதிக்குள் அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் டைம்லைன் தரவுகள்
இந்தப் புதிய வசதி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸில் தேடப்பட்ட இடங்கள், சென்ற பகுதிகள் குறித்த எந்த தகவலும் புதிய வர்சனில் கூகுள் சர்வரில் சேமித்து வைக்கப்படாது. க்ளவுட் சர்வரில் இல்லாம்ல் மொபைல் ஸ்டோரேஜில் பயணம் செய்த இடங்களின் விவரங்களை ஸ்டோர் செய்யும். இது ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். எதுவாக இரண்டிற்கும் பொருந்தும். உணவகத்திற்கு சென்ற விவரங்கள் கூட சர்வரில் ஸ்டோர் ஆகாது.
’end-to-end encrypted cloud backups’ வசதியை ஏற்கனவே கூகுள் வழங்கி வருகிறது. விரைவில் கொண்டுவரப்படும் வசதி தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இது செயலியில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெப் வர்சனில் இந்த வசதி வெளியாவது குறித்து,ம் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதும் குறித்தும் கூகுள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)