மேலும் அறிய

Gmail: அச்சச்சோ! ஜிமெயில் சேவை நிறுத்தப்படுகிறதா? கதறும் பயனர்கள் - கூகுள் தந்த பளீச் விளக்கம்!

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை நிறுத்துவதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

Gmail: கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை நிறுத்துவதாக  இணையத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. 

ஜிமெயில் சேவை நிறுத்தப்படுகிறதா?

ஜிமெயில் சேவையை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யூடியூப், கூகுள் குரோம், கூகுள் மேப் போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் ஜிமெயில் முக்கியமாக தேவைப்படுகிறது. 

இதனால், ஜிமெயில் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜிமெயில் சேவை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்ப, பெற அல்லது சேமிக்க முடியாது என்று ஸ்கிரீன் ஷாட் ஒன்று பரவி வருகிறது.

உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.  அதே நேரத்தில், நெட்டிசன்கள் பலரும் கூகுள் தனது ஜிமெயில் சேவையை நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்தனர்.

கூகுள் சொன்னது என்ன?

இந்த தகவல் இணையத்தில் கசிந்த நிலையில், கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "ஜிமெயில் இங்கே தான் இருக்கப்போகிறது" என்று ஒரே வரியில் விளக்கம் அளித்துள்ளது.  கூகுள் தரப்பில் இருந்து விளக்கம் வந்த பிறகு பயனர்கள் நிம்மதி அடைந்தனர். 

என்ன காரணம்?

ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதாக இணையத்தில் திடீரென தகவல் பரவ காரணம் என்ன என்பது பற்றி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது,  ”கூகுள் நிறுவனத்தின் அடிப்படை வெர்ஷனான ஹெச்எம்எல் (HTML) வெர்ஷனை மட்டும் நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஜிமெயிலின் ஹெச்டிஎம்எல் (HTML) பதிப்பு குறைந்த நெட்வொர்க் உள்ள பகுதிகளில் மட்டும்  பயன்படுகிறது. எனவே, பயனர்களின் சேவையை மேம்படுத்த  ஹெச்டிஎம்எல் வெர்ஷனை (HTML Version) மட்டும் கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்தான் தவறாக, இணையத்தில் ஜிமெயில் சேவையே நிறுத்தப்படுவதாக தகவலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Sir CV Raman Effect: சர் சி.வி.ராமன் விளைவு என்றால் என்ன? அவரது கண்டுபிடிப்புகளும், அறிவியலுக்கான பங்களிப்பும் ஒரு பார்வை

One Plus 12R: ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.