Apple's Clubhouse | எலன் மஸ்க் குறிப்பிட்ட க்ளப் ஹவுஸ் என்றால் என்ன?
குழு அரட்டைகளை ஒருவர் தொடங்குவார், அதில் குறிப்பிட்ட தலைப்பு குறித்து ஆடியோ வாயிலாக விவாதிக்கலாம் அல்லது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கலாம்.
சில மாதங்களுக்கு முன்னர், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் "நானும் க்ளப்ஹவுஸில் உள்ளேன்" என ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த க்ளப்ஹவுஸ் மிகவும் பிரபலமாக தொடங்கியது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஆம்! இது முற்றிலுமாக ஆடியோ பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது.
க்ளப்ஹவுஸ் என்றால் என்ன?
க்ளப்ஹவுஸ் என்பது ஒரு செயலி. இதுவும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒன்றுதான் என்றாலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஆம்! இது முற்றிலுமாக ஆடியோ பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது சாட்டிங் செயலி அல்ல. தற்போது இந்தியாவில் மெல்ல மெல்ல கவனத்தை ஈர்க்கும் இந்த செயலியானது, மேலை நாடுகளில் மிகவும் பிரபலம்.
இந்த செயலியில் குழு அரட்டைகளை ஒருவர் தொடங்குவார், அதில் குறிப்பிட்ட தலைப்பு குறித்து ஆடியோ வாயிலாக விவாதிக்கலாம் அல்லது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கலாம். இடையே ஒட்டுகேட்கும் நபர் தனது கருத்தை தெரிவிக்க விரும்பினால், " கையை உயர்த்து (Raise your hand) " என்ற வசதி மூலமாக குழு உறுப்பினருக்கு தெரியப்படுத்தலாம். குழுவின் ஒருங்கிணைப்பாளர் அதற்கான (Admin ) அனுமதியை வழங்குவார். என்னதான் செயலியின் வடிவமைப்பும் , பயன்பாடும் எளிமையாக தெரிந்தாலும் , இந்த செயலியில் நுழைந்த உடனே ஒரு தனி குழுவினை உருவாக்க முடியாது. அதற்காக சில காலம் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் அதற்கான அழைப்பினை பெற முடியும். ஒரு பயனாளருக்கு மூன்று அழைப்புகள் கொடுக்கப்படும். அதில் இரண்டினை புதிய பயனாளர்கள் அல்லது நண்பர்களுக்கு வழங்கலாம். மேலும் என்ற #clubhouse முகவரியில் சென்று ஃபேஸ்புக் வாயிலாகவோ, ட்விட்டர் வாயிலாகவோ அழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் மற்றும் விவாதத்திற்கான களமாக க்ளப் ஹவுஸ் செயல்படும் என இதனை உருவாக்கிய பால் டேவிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு மட்டும் பீட்டா(beta) வெர்சன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் இந்த செயலியின் பீட்டா வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது