Digital Data Security | உங்க டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை கவனிங்க போதும்..
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தலங்கள் இல்லா வாழ்க்கை என்பது கையறு நிலை போன்றது என்றாலும், அவற்றை "தேவை" என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தினால் மட்டுமே டிஜிட்டல் திருட்டு மட்டுமல்லாது பல சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்
நாகரீக வாழ்க்கையில் தொழில்நுட்பம் என்பது தவிர்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தினம் தினம் நாம் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளங்கள் வாயிலாகத்தான் நாம் பயணிக்க தொடங்கியுள்ளோம். தொழில்நுட்பத்திற்கு அடிமையாக்கப்பட்ட நம்மை போன்றோரின் தகவல்களை பெற்றுக்கொண்டோ, திருடிக்கொண்டோ வியாபாரமாக்கும் யுக்திகளை கையாண்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவங்கள் . பயனாளர்களுக்கே தெரியாமல் தகவல்கள் திருடப்படுவதை ஆப்பிள் , அமெரிக்க நிறுவனமான டிடிபி போன்றவை கண்டித்து வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் திருட்டில் இருந்து தப்பிப்பதற்கான சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
1.பிரவுசர் (Browser)
பயனாளார்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசர்கள், குரோம், ஃபயர் பாக்ஸ், சஃபாரி உள்ளிட்டவைகள்தான். இவற்றை private mode வசதியில் கையாளுவதே சிறந்தது என கூறப்படுகிறது. மேலும் தேடப்பட்ட தகவல்களின் history ஐcookies உடன் சேர்ந்த்து அழிக்கும் பொழுதுதான் முழுமையான தகவல் அழிக்கப்படும். ஆனால் Brave என்ற பிரவுசரை பயன்படுத்தும் பொழுது தேவையில்லாத விளம்பரம் மற்றும் தகவல் திருட்டில் இருந்து தப்பிக்க முடியும் என பயனாளர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை குரோமை விட அதிவேகமாக செயல்படும் என்றும் குறைந்த அளவிளான பேட்டரி திறனை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
2. தேடுபொறி (search engine )
நம்மில் பலரும் பயன்படுத்தும் தேடுபொறி கூகுள் . இதற்கு மாற்றாக இணைய பாதுகாப்பு நிறுவனமான DUCKDUCKGO வின் தேடுபொறியை பயன்படுத்தலாம் இதன் மூலம் நமது தகவல்கள் முற்றிலும் பாதுகாப்படும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதே போல Ecosia என்ற தேடுபொறியும் பயனர் திருட்டில் ஈடுபடுவதில்லை, மேலும் Ecosia தேடுபொறி மூலம் அவற்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க பயன்படுத்துகிறார்கள்.
3. இருப்பிடம் (location)
பொதுவாக நாம் பயன்படுத்தும் பல செயலிகளிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ முதன் முதலில் உள்நுழையும் பொழுது, நமது அடிப்படை தகவல்களை அனுக , அந்நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். அதில் ஒன்றுதான் இருப்பிட அனுகல் . அதனை அனுமதிக்காத நிலையில் உங்களை அந்நிறுவனம் ட்ராக் செய்வது தடுக்கப்படலாம். இருப்பிட அனுகல் மூலமாகத்தான் நிறைய தகவல் திருட்டு நிகழ்கிறது. app setting வசதி மூலம் இருப்பிட வசதி அனுகலை பயனாளர்கள் கட்டுப்படுத்தலாம்.
4. இ-மெயில்( e-mail)
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் முக்கிய ஆவண பறிமாற்றத்திற்கு பயன்படுத்துவது இமெயில். என்றாலும் அது அத்தகைய பாதுகாப்பு நெறிமுறைகளை வழங்குவது இல்லை. இமெயில் வாயிலாக ஹேக்கர்ஸ் எளிமையாக உள்நுழைய முடியும் என்பதுதான் வேதனை. இதனை தடுக்க சுவிட்சர்லாந்து நிறுவனம் protonmail.com என்ற இ-மெயில் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.இது end-to-end encryption முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
5. சமூக ஊடகங்கள் இல்லா வாழ்க்கை
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தலங்கள் இல்லா வாழ்க்கை என்பது கையறு நிலை போன்றது என்றாலும், அவற்றை "தேவை" என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தினால் மட்டுமே டிஜிட்டல் திருட்டு மட்டுமல்லாது பல சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்