MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
திருப்பத்தூரில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அட்வான்ஸாக செயல்படுவதால் தான், டேக் ஆப்தி நேஷன் ஆக உள்ளோம்

மகளிருக்கு 5000 ரூபாய் உரிமைதொகைதான் டாக் ஆப் தி நேசன் என்றும் இது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஸ்டைல் என திருப்பத்தூரில் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
வாக்குச்சாவடி குழு மாநாடு
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று (14) திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிகுழு மாநாடு நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் மாநாட்டில் அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நீலோபர் கபீல், அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார், அவருக்கு மு.க.ஸ்டாலின் திமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.
"எந்த வீட்டில் நுழைந்தாலும், திமுக பிராண்ட்”
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2021 தேர்தல் இதையெல்லாம் செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தோம், சொன்னதை தாண்டி செய்து கெத்தாக மக்கள் முன் நிற்கின்றோம், வாக்கு செலுத்திவிட்டு அந்த பெட்டியிற்கு சீல் வைக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும் என்றார். திமுக ஆட்சி வந்தால், சுயமரியாதை ஆட்சி வரும் என மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும், அப்போது திமுகவின் திட்டங்களை மூச்சுவிடமால் கூறி, நான் கூறியது புத்தமாக உள்ளது, அதனை மனப்பாடம் செய்து, நோட்டீஸ் அடித்து கொடுங்கள், எந்த வீட்டில் நுழைந்தாலும், திமுக பிரான்ட் தான் தெரிய வேண்டும்.200 தொகுதிகளில் வெற்றி பெற ஓய்வை மறந்து உழைக்க வேண்டும், சமூக வலைத்தளங்கள் வந்தாலும், மக்களிடம் நேரில் சென்று பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை வாக்கு கேட்க வேண்டும், நமக்கு ஆதரவு கூடியிருக்கிறது,
திரும்பிய பக்கமெல்லாம் தி.மு.க. அலை வீச வேண்டும்... Black & Red-தான் தமிழ்நாட்டின் நிரந்தர Trend எனக் காட்ட வேண்டும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 14, 2026
மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து நம் சாதனைகளைச் சொல்வோம்! 2026-இன் வெற்றியை இம்முறை 200+ தொகுதிகளோடு repeat செய்வோம்!
வடக்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளும்… pic.twitter.com/44XypSSxnr
விரோதிகளுக்கு ஷாக்:
அட்வான்ஸாக செயல்படுவதால் தான், டேக் ஆப்தி நேஷன் ஆக உள்ளோம், நேற்று காலை 1 கோடி 35 லட்சம் பெண்கள் முகத்தில் புன்னகை, முதல் ரிங்டோன் 5000 ரூபாய் மகளீர் உரிமைத்தொகை என்ற ரிங்டோன் தான், மகளிர் உரிமை தொகையை வழக்கு தொடுத்து, பாஜகவினர் நிறுத்தபார்த்தார்கள், அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர்கள் எந்த திட்டமும் செய்யவிடமாட்டார்கள், மக்கள் விரோதிகளுக்கு ஷாக் தான் எனது ஸ்டைல் என்றார்.
























