Digilocker | ஸ்மார்ட்ஃபோனில் ட்ரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதும், டவுன்லோட் செய்வதும் எப்படி?
டிஜிலாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவது எப்படி என்பதை எளிதாக விளக்குகிறது இந்த கட்டுரை.
இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் பல வகைகளில் அவசியமாக தேவைப்படும் ஆவணங்களாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களின் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் (DigiLocker) என்பது ஒரு வகையான விர்ச்சுவல் லாக்கர் ஆகும். இது மத்திய அரசால் ஜூலை 2015-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜி லாக்கரில் வைத்தால், உங்கள் பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) அட்டை, பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள், தொலைந்துவிடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம். டிஜிட்டல் முறையில் கிடைக்கக்கூடிய லாக்கர் வசதியை நீங்கள் பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கலாம்.
டிஜிட்டல் லாக்கர் (Digital Locker) அல்லது டிஜிலாக்கர் ( DigiLocker) என்பது ஜூலை 2015-இல் பிரதமர் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் (digital india) கீழ் டிஜிலாக்கர் தொடங்கப்பட்டது. இதனை தேவைப்படும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். டிஜிலாக்கரின் உதவியுடன், உங்கள் முக்கியமான ஆவணங்கள் எதையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இது தவிர, நீங்கள் இந்த லாக்கரைப் பயன்படுத்தினால், நீங்கள் அந்த ஆவணத்தை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லவேண்டிய தேவையில்லை. அதாவது, இதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்
இப்போது டிஜி லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பாதுகாப்பது குறித்து பார்க்கலாம். தொடங்குவதற்கு முன், நீங்கள் டிஜிலாக்கரில் கணக்கு வைத்திருப்பது அவசியம். உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி டிஜிலாக்கரில் பதிவு செய்யலாம். இதில் கணக்கை தொடக்க, முதலில் digilocker.gov.in அல்லது Digitallocker.gov.in என்ற வலைதளத்திற்குச் செல்லவும். பின்னர் தளத்தின் வலதுபக்கத்தில் சைன்-அப் ( Sign Up) என்பதைக் கிளிக் செய்க. உங்கள் மொபைல் எண்ணை எண்ட்டர் செய்வதற்கு ஒரு புதிய பக்கம் தோன்றும்.
நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் ஒரு OTP ஐ அனுப்பும். பயனர் பெயர் அதாவது யூஸர் நேம் மற்றும் பாஸ்வேர்டை அமைக்கவும். பின்னர், டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம்.
- டிஜிலாக்கர் தளத்திற்குச் சென்று பயனர்பெயர் மற்றும் ஆறு இலக்க PIN உடன் உள்நுழைக.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியில் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பெறுவீர்கள்.
- உள்நுழைந்தவுடன், வழங்கப்பட்ட Get Documents பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது, Search Box இல் "ஓட்டுநர் உரிமம்" என்ற வார்த்தையைப் உள்ளிடவும்.
- உங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற மாநில அரசைத் தேர்ந்தெடுக்கவும். மாற்றாக, நீங்கள் அனைத்து மாநிலங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
- உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிட்டு Get Documents பட்டனை அழுத்தவும்.
- மேலும் தொடர்வதற்கு முன் உங்கள் தரவை டிஜி லாக்கருடன் பகிர்ந்து கொள்ள டிஜி லாக்கருக்கு உங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும்.
- டிஜிலாக்கர் இப்போது உங்கள் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து துறையிலிருந்து பெற்றுத்தரும்.
இப்போது வழங்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலுக்குச் சென்று உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமத்தை பிடிஎஃப் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் Soft Copy ஆக பதிவிறக்கம் செய்யலாம். டிஜிலாக்கர் செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலும் பெறலாம்.
நீங்கள் டிஜிலாக்கரில் பதிவுசெய்ய விரும்பவில்லை மற்றும் மாற்று வழியைத் தேடுகிறீர்களானால், நீங்கள் Google Play அல்லது Apple-இன் ஆப் ஸ்டோரிலிருந்து mParivahan பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அங்கு பதிவு செய்யலாம். பதிவுசெய்தவுடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை DL டாஷ்போர்டு ஆப்ஷனின் கீழ் காணலாம்.