ஓவர் ஸ்பீடுக்கு அபராதம் இனி வேண்டாம்.. கார் வேகத்தை கட்டுப்படுத்தும் கூகுள் மேப்! இதப்படிங்க முதல்ல!
நம் காரை நம்முடைய கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன.
சாலையில் போலீஸ் முகம் தெரிகிறதா என பார்த்துக்கொண்டு சாலை விதிகளை கடைபிடிப்பவர்கள் பலர் உண்டு. கையில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு போலீசாரை பார்த்ததும் தலையில் மாட்டுவார்கள். அதேபோல் சிக்னலை மதிக்காமல் போவார்கள். சாலை விதிகள் நம்முடைய பாதுகாப்புக்கானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது தண்டனைக்கும், அபராதத்துக்குமானது அல்ல. இப்படி ஆள் இல்லாத நேரத்தில் சாலை விதிகளை மீறும் ஆட்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க டிஜிட்டல் உலகம் கைகொடுக்கிறது.
சென்னை போன்ற மாநகரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பிரத்யேக கேமராக்கள் சாலையில் செல்லும் வாகனங்களை மிக உன்னிப்பாக கவனிக்கின்றன. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்களை தன்னுடைய கேமராவில் க்ளிக் செய்து காவல் கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுப்புகிறது. கேமரா க்ளிக் என்றால் ஏதோ உங்கள் முகத்தை அல்ல, வாகனத்தில் எண்ணை.
அந்த எண்ணுக்கு உண்டான தகவலின்படி சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதத்தொகை எஸ் எம் எஸ், மெயில் மூலமாக சென்றுவிடும். நீங்கள் அபராதத் தொகையையும் செல்போனில் இருந்தே செலுத்தலாம். இப்படியாக அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட்டது சாலை பாதுகாப்பு. பொதுவாக அதிகாலை நேரம், நள்ளிரவில் காரில் செல்பவர்கள் சாலை காலியாக இருப்பதால் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விடுகின்றனர். அது ஓவர் ஸ்பீடு கேட்டகிரியில் சென்றுவிடுவதால் வீணாக அபராதம் செலுத்த வேண்டி இருக்கிறது. சாலையில் போலீசார் இல்லையென்றாலும் மூன்றால் கண் பிடித்துவிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், நம் காரை நம்முடைய கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன.
ஸ்மார்ட்போன்:
கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் சோஷியல் மீடியாவுக்கு மட்டுமல்ல. அதில் பல சூப்பர் அம்சங்களும் உள்ளன. உங்களின் கார் வேகத்தை ஸ்மார்ட்போன் உங்களுக்கு எடுத்துச் சொல்லும். இதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ளன. அதனை இன்ஸ்டால் செய்துகொண்டு உங்கள் வாகனத்தை கட்டுக்கொள் வைத்துக்கொள்ளுங்கள்
கூகுள் மேப்:
காரின் டிஸ்பிளேவுடன் இணைக்கப்பட்ட கூகுள் மேப் உங்கள் வேகத்தை உங்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லும். கூகுள் மேப்பில் உள்ள ஸ்பீடோமீட்டர் வசதி, நீங்கள் வரம்பைக் கடந்து வேகமெடுத்தால் எச்சரிக்கை செய்யும். இதனால் சரியான வேகத்திலேயே நீங்கள் காரை ஓட்டிச் செல்லலாம்.
ஆக்டீவேட் செய்வது எப்படி?
ஸ்பீடோமீட்டரை ஆக்டீவெட் செய்ய ஏண்டுமென்றால் கூகுள் மேப் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். Google Map ப்ரபைலை க்ளிக்செய்து Settings ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் Navigation Settings ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
எப்படி வேலை செய்யும்.?
கூகுள் மேப்பில் ஸிபீடோமீட்டர் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு காரின் வேகத்தை அது கண்காணிக்கும். குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டினால் ஸ்பீடோமீட்டர் ஆப்ஷன் உங்களை எச்சரிக்கும். இதன் மூலம் நீங்கள் காரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். வேகத்தை தாண்டினால் சிவப்பு கலராகவும், வேகம் கட்டுக்குள் வந்தால் நார்மல் கலரிலும் கூகுள் மேப் மாறும்.