ICC சாம்பின்ஸ் ட்ராபி - பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக் கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ் திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணி கள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.59.90 கோடியாகும்
இது 2017-ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் அதிகமாகும். இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெறும்.
இறுதி சுற்றில் தோல்வியை சந்திக்கும் அணிக்கு ரூ.4.86 கோடி கிடைக்கும்.
லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு தலா ரூ.29.50 லட்சம் வழங்கப்படும்.
5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.04 கோடியும் 7,8-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.21 கோடியும் கிடைக்கும்.
2017-ம் ஆண்டு வரை 4 ஒரு முறை நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு சாம்பி யன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடத்தப்படுகிறது.