(Source: ECI/ABP News/ABP Majha)
Broadband Plan Jio Fiber | Jio Fiber-இல் எது பெஸ்ட்? போஸ்ட்பெய்டா? ப்ரீபெய்டா? ப்ளான் விவரங்கள் என்னென்ன?
ஃபைபர் மூலம் இண்டர்நெட் வழங்கும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. போஸ்ட்பெய்ட் மட்டுமின்றி ப்ரீபெய்ட் அடங்கிய ப்ளான்களுடனும் பைபர் வைஃபை திட்டத்தை ஜியோ அறிவித்தது.
செல்போன் இண்டர்நெட் பயன்பாட்டில் ஒரு புரட்சியையே செய்தது ஜியோ தான். மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என ஓட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாளைக்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என இணையசேவையை அள்ளி வீசியது ஜியோ. தொடக்கத்தில் இலவசமாக சிம் கார்டுகளும் கொடுக்கப்பட்டன. ஜியோவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்த ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்ப இண்டர்நெட் கொடுக்கத் தொடங்கின. செல்போன் இண்டர்நெட்டில் பல அதிரடிகளை உண்டாக்கிய ஜியோ தன்னுடைய அடுத்த இலக்கை தொடங்கியுள்ளது. ஃபைபர் மூலம் இண்டர்நெட் வழங்கும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. போஸ்ட்பெய்ட் மட்டுமின்றி ப்ரீபெய்ட் அடங்கிய ப்ளான்களுடனும் பைபர் வைஃபை திட்டத்தை ஜியோ அறிவித்தது.
ப்ரீபெய்ட்:
ரூ.399 முதல் ப்ரீபெய்ட் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இந்த ப்ளானில் 30Mbps ஸ்பீடு இண்டர்நெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ரூ,699 ப்ளானில் 100Mbps ஸ்பீடு இண்டர்நெட், ரூ.999 ப்ளானில் 150Mbps இண்டர்நெட் ஸ்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.999 ப்ளானில் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்,சோனொ லைவ் உள்ளிட்ட 12 சப்ஸ்கிரைப்ஸ்களை கொண்டது. அதேபோல் 300Mbps நெட் வேகத்தில் ரூ.1499 ப்ளானும், 500Mbps வேகத்தில் Rs 3999 ப்ளானும் உள்ளது.
போஸ்ட்பெய்ட்:
4k வசதிகொண்ட செட்டாப் பாக்ஸுடன் போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் மாதத்திற்கு ரூ.399க்கு கிடைக்கிறது. மாதமாதம் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டம் மட்டுமல்ல, ஒரு வருடம் அல்லது 6 மாதங்கள் எனவும் பேக்கேஜ்களை கொடுத்துள்ளது ஜியோ. உடன் கொடுக்கப்படும் 4k செட்டாப்பாக்ஸுக்கு பணம் செலுத்த தேவையில்லை. நீங்கள் ரூ.999-க்கு அதிகமான பேக்கேஜ்ஜை தேர்வு செய்தால் நீங்கள் 15 ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்கு தனிப்பட்ட ப்ளான் விவரத்தை ஜியோ தெரிவிக்கவில்லை. ஆனால் மாதத்திற்கு ரூ.399 முதல் ரூ.8499 வரை பேக்கேஜ்கள் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
6மாத பேக்கேஜ்:
30Mbps வேகத்தில் ரூ.2394 ப்ளானும், ரூ.4194க்கு 100Mbps நெட் வேகத்திலும் ப்ளான்கள் உள்ளன. இந்த ப்ளான்களுடன் இணைந்து அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்,சோனொ லைவ் உள்ளிட்ட சப்ஸ்கிரைப்கள் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கும் பேக்கேஜ்கள் உண்டு. ரூ.5994க்கு 150Mbps வேகம், 300Mbps வேகத்தில் ரூ.8994 ப்ளானும், ரூ.4994க்கு 500Mbpsப்ளானும், அதிகபட்ச நெட் வேகமாக 1ஜிபி வேண்டுமென்றால் ரூ.23994 ப்ளானும் 6 மாத கால பேக்கேஜ்ஜில் கிடைக்கிறது.
ஒரு வருட பேக்கேஜ்:
6 மாத பேக்கேஜ் போல ஒரு வருட பேக்கேஜ்ஜையும் அறிவித்துள்ளது ஜியோ பைபர். 30Mbps வேகத்தில் ரூ.4788 ப்ளான், 100Mbps வேகத்தில் ரூ 8388 ப்ளான், 150Mbps வேகத்தில் ரூ.11988 ப்ளான், 300Mbps வேகத்தில் ரூ.17988 ப்ளான், 500Mbps வேகத்தில் ரூ.29988 ப்ளான் அதேபோல, 1 ஜிபி இண்டர்நெட் வேகம் என்றால் ரூ.47988 ப்ளானும் உள்ளது என அறிவித்துள்ளது ஜியோ.