BlackBerry | முடிவுக்கு வந்த பிளாக்பெர்ரி மொபைல்! - நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த செவ்வாய்க்கிழமை பிளாக் பெர்ரி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இப்போது Apple நிறுவனத்தின் மொபைல்போன்ஸ்தான் சந்தையில் விலை உயர்ந்த மற்றும் தனித்துவமான இயங்குதளத்தை கொண்ட படைப்புகளாக பார்க்கப்பட்டலும் , அதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப சந்தையில் களமிறங்கியது பிரபல பிளாக்பெர்ரி நிறுவனம். 2012 ஆண்டு முடிவில் கிட்டத்தட்ட 80 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டிருந்தது பிளாக்பெர்ரி. தனித்துவமான இயங்குதளம் மற்றும் வடிவமைப்புடன் அறிமுகமான பிளாக்பெர்ரி ஆப்பிள் தொடுதிரை தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் சிறிது காலத்திற்கு பிறகு தனது உற்பத்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க தொடங்கிவிட்டது. முழுமையாக உற்பத்தியை விட்டு வெளியேற இருப்பதாக பல ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான நிலையில், பிளாக்பெர்ரி இறுதியில் அதன் சொந்த மென்பொருளைக் கைவிட்டு, ஆண்ட்ராய்டைத் தழுவி இயங்கியது. அதன் பிறகு பிளாக்பெர்ரி லிமிடெட் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு பாதுகாப்பு மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 2020 இல் நிறுவனம் முதலில் செய்தியை அறிவித்தது.
End Of An Era: Classic #BlackBerry Phones are Now Officially Dead.
— MacSol Tech (@MacSolTech) January 1, 2022
- BlackBerry said that devices based on its proprietary operating system will no longer be able to “reliably function” from 4th January. pic.twitter.com/5Kel8VWDpr
BlackBerry (BB) ஆனது 2016 ஆம் ஆண்டு முதல் மொபைல் உற்பத்தியிலிருந்து வெளியேறிவிட்டது. ஆனால் பல ஆண்டுகளாக TCL மற்றும் 5G பிளாக்பெர்ரி சாதனத்திற்கான ஆஸ்டின், டெக்சாஸ்-அடிப்படையிலான பாதுகாப்பு தொடக்கமான OnwardMobility உள்ளிட்ட மொபைல் உற்பத்தியாளர்களுக்கும் அதன் பிராண்டிற்கு தொடர்ந்து உரிமம் அளித்தது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிளாக் பெர்ரி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
.
— Bahman Radin (@BahmanRadin) December 31, 2021
.
.
Blackberry...
It was not just an operating system ...
It was my secret love ...
It was a special way of life ...
I will love you forever, BlackBerry ...
Do not forget...
you are my moment by moment...
31.DEC.2021
RA√IN
.#blackberry pic.twitter.com/aOka6Zg6Py
அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 4 முதல், பிளாக்பெர்ரி 10, 7.1 ஓஎஸ் மற்றும் அதற்கு முந்தைய கிளாசிக் சாதனங்களுக்கான ஆதரவை பிளாக்பெர்ரி நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்காத அதன் பழைய சாதனங்கள் அனைத்தும் இனி டேட்டாவைப் பயன்படுத்தவோ, குறுஞ்செய்திகளை அனுப்பவோ, இணையத்தை அணுகவோ அல்லது 911க்கு அழைப்புகளைச் செய்யவோ முடியாது.பெரும்பாலான மொபைல் பயனர்கள் பிளாக்பெர்ரியில் இருந்து வெளியேறியிருந்தாலும் அதன் இயக்க முறைமையின் கடைசிப் பதிப்பு 2013 இல் தொடங்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.