மேலும் அறிய

Apple Iphone: அடடே..! குறைஞ்ச விலையில் புதிய ஐபோன் 16e, இன்று நள்ளிரவில் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் - இவ்ளோ அம்சங்களா..

Apple Iphone: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மலிவு விலை ஐபோனை சர்வதேச சந்தையில் இன்று நள்ளிரவு அறிமுகப்படுத்த உள்ளது.

Apple Iphone: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மலிவு விலை ஐபோன் ஆனது, SE சீரிஸின் தொடர்ச்சியாக இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மலிவு விலை ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மலிவு விலை ஐபோன் மாடலை வெளியிட தயாராகி வருகிறது. இருப்பினும், வெளியாகியுள்ள தகவல்களின்படி புதிய மாடலானது SE சீரிஸின் தொடர்ச்சியாக இருக்காது எனவும், அந்த பெயரை கொண்டிருக்காமல், புதிய மாடலாக - ஐபோன் 16e என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் முந்தைய SE மாடல்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். அதனால் அது ஒரு புதிய அடையாளத்தை பெறக்கூடும்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கடந்த வாரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பிப்ரவர் 19ம் தேதி நிறுவனம் அதன் 'குடும்பத்தின் புதிய உறுப்பினரை' அறிவிக்கும் என்று குறிப்பிட்டார். அதன்படி, ஐபோன் SE ஒரு புதிய பெயரைப் பெறும் மற்றும் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் புதியதாக சாதனமாக சந்தைப்படுத்தப்படும் என்பதை இது குறிக்கிறது. 

பட்ஜெட்டில் அம்சங்கள் நிறைந்த ஐபோன்:

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஆப்பிளின் ஐபோன் SE சீரிஸ் பாரம்பரியமாக பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனங்களுடன் தொடர்புடையது. அவை பழைய ஐபோன் வடிவமைப்புகளை மீண்டும் உருவாக்குகின்றன. புராசசர் மற்றும் நெட்வொர்க் திறன்கள் போன்ற உட்புற அம்சங்களை மட்டுமே மேம்படுத்துகின்றன. இருப்பினும், வெள்யாகியிருக்கும் தகவல்கள், வரவிருக்கும் மாடல் முந்தைய ஃபார்முலாவில் இருந்து கணிசமாக விலகக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. 

புதிய ஐபோனில் என்ன அம்சங்கள் இடம்பெறலாம்?

ஐபோன் 14 மாடலின் தாக்கத்தில் புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இதில் ஒற்றை லென்ஸ் கேமரா மட்டுமே கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆனால், ஐபோன் 14 மாடலில்  இரட்டை லென்ஸ் கேமரா இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இது ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட், கேமரா கட்டுப்பாட்டு அம்சம் அல்லது தனிப்பயனாக்கக்கூடிய செயல் பொத்தானை கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காராணம் இவை எதுவுமே ஐபோன் 14 இல் இல்லை.

மற்றொரு முக்கிய மேம்படுத்தல் புராசசராக இருக்கலாம். வரவிருக்கும் மாடலில் A18 சிப் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சாதனத்தை ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுடன் இணக்கமாக்கக்கூடும், இது முந்தைய SE சீரிஸில் இருந்து மேலும் தனித்து நிற்க உதவும்.

விலை விவரங்கள்:

மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், ஐபோன் 16 தொடரின் கீழ் சாதனத்தை பிராண்டிங் செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். SE பெயரிலிருந்து விலகிச் செல்வது மட்டுமின்றி,  தற்போதைய SE மாடலின் 37 ஆயிரம் ரூபாய் என்பதை காட்டிலும் கூடுதல் விலையை கொண்டிருக்கலாம். குறிப்பாக OLED டிஸ்ப்ளே மற்றும் ஃபேஸ் ஐடி போன்ற எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டு விலை உயர்வு இருக்கும்.

மறுபுறம், ஆப்பிள் அதன் நீண்டகால அங்கீகாரம் மற்றும் தயாரிப்பு வரிசையில் நெகிழ்வான நிலைப்பாடு காரணமாக SE பிராண்டிங்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அதன் பெயரில் ஒரு எண் இல்லாமல், SE மாடல் வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக பொருத்தமானதாக இருந்து வருகிறது. இது நிலையான, அடையாளம் காணக்கூடிய எண்ட்ரி லெவல் ஆப்ஷன்களை வழங்கும் வாய்ப்பை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
Embed widget