Android 13 : வந்தாச்சு ஆண்ட்ராய்ட் 13 ! இந்த மொபைல் பயனாளர்கள்தான் முதல்ல பயன்படுத்தலாம் !
Pixel 3 மற்றும் 3a மொபைல் போன்களுக்கு இறுதியாக ஆண்ட்ராய்ட் 12 புதுப்பித்தல் வழங்கப்பட்டது. அதோடு அதற்கான அப்டேட்ஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயக்குதளத்தின் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்ட் 13 ஆனது கடந்த பிப்ரவரி மாதம் டெவலப்பர் சோதனை முயற்சியை செய்தது. அது வெற்றியடைந்த நிலையில் ஆறு மாதங்களாக குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு வழங்கி சோதனையை தொடர்ந்து வருகிறது. நிலையான ஆண்ட்ராய்டு 13 செப்டம்பர் பாதுகாப்பு இணைப்புடன் தொடங்கப்படும் என்று கூகுள் கூறியது. இதனால் அடுத்த மாதம் பிக்சல் மொபைல் போன்களுக்கு முதற்கட்டமாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முன்னதாகவே ஆண்ட்ராய்டு 13 இன்று அனைத்து பிக்சல் போன்களுக்கும் வரும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
எந்தெந்த பிக்சல் மொபைலுக்கு கிடைக்கும் :
புதிய ஆண்ட்ராய்டு13 பதிப்பு அனைத்து லேட்டஸ்ட் மாடல் பிக்சல் ஃபோன்களிலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. பு உங்கள் பிக்சலில் பதிவிறக்கம் செய்ய முடியுமா என்பதை உங்கள் சிஸ்டம் அமைப்புகளில் சரிபார்க்கவும். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான பிக்சல் மொபைல்போன்களே புதிய அப்டேட்டை பெறும் . அந்த மொபைல் விவரங்களை கீழே காணலாம்
பிக்சல் 4
பிக்சல் 4 XL
பிக்சல் 4a
பிக்சல் 4a (5G)
பிக்சல் 5
பிக்சல் 5a
பிக்சல் 6
பிக்சல் 6 ப்ரோ
பிக்சல் 6a
வசதிகள் :
Pixel 3 மற்றும் 3a மொபைல் போன்களுக்கு இறுதியாக ஆண்ட்ராய்ட் 12 புதுப்பித்தல் வழங்கப்பட்டது. ஆனால் அதோடு அதற்கான அப்டேட்ஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய் 12 பல புதிய வசதிகளை கொண்டு வந்தது. அதே போல ஆண்ட்ராய்ட் 13 லும் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இதில் பிக்சல் மொபைல்கள் அதிக வசதிகளை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.உங்கள் வால்பேப்பரிலிருந்து எந்தெந்த வண்ணங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மேலும் நுணுக்கமாகத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கும் கூடுதல் மெட்டீரியல் யூ தீமிங் விருப்பங்களுக்கான அணுகலை Android 13 வழங்கும். நீங்கள் இசையைக் கேட்கும் போது ப்ராக்ரஸ் பட்டியுடன் கூடிய புதிய மீடியா பிளேயர் வரும் . அழகாக காட்சிப்படுத்தப்பட்ட ஆல்பம் கவர்களை காணலாம்.இதில் உள்ள per-app languages மூலம் உங்களுக்கு தேவையான மொழிகளை ஒவ்வொரு செயலிக்கும் மாற்றிக்கொள்ளலாம். மொபைல் மொழிக்கும் இதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
The new media centre on Android 13 is 🔥🔥🔥 #Android13 #Pixel6Pro #googlepixel pic.twitter.com/vgWBcbc7ac
— Neil Sargeant (@Neil_Sarg) August 16, 2022