AI-Heart Attack: ஹார்ட் அட்டாக்கை 30 நிமிடங்களுக்கு முன்பே கண்டறியும் AI சாதனம்? எப்படி செயல்படுகிறது?
AI Tool Predicts Heartbeats: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மருத்துவ துறையிலும் புரட்சியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது
செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக்கை முன்கூட்டியே அறியும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு:
AI தொழில்நுட்பமானது, இப்போது நம் அன்றாட வாழ்விலும் ஊடுருவி ஒருங்கிணைத்து விட்டது. தனிப்பட்ட பயன்பாட்டிற்கான தகவல் தேடல் முதல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை என AI-யால் தொடப்படாத எந்த துறைகளும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் லக்சம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், புதிய AI- அடிப்படையிலான மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
இது கருவியானது, ஹாட் அட்டாக் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே கணிக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது, 80 சதவிகிதம் துல்லியமாக செயல்படுவதாக, ஆராய்ச்சியாளர்கள் சோதனை மாதிரிகள் மூலம் தெரிவிக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து லக்சம்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,நாம் பயன்படுத்த கூடிய ஸ்மார்ட் போன்களில், இந்த தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, ஸ்மார்ட்வாட்ச்களில் பதிவு செய்யப்பட்ட தரவை மாதிரிகளை அடிப்படையாக கொண்டு செயல்படும். நோயாளிகள் மாரடைப்பைத் தடுக்கவும், அவர்களின் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவிகரமாக இருக்கும்.
சோதனை:
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து, சீனாவின் வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் உள்ள , 350 நோயாளிகளிடம், 24 மணி நேரம் தொடர் பதிவு செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த மாதிரிக்கு வார்ன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த AI மாதிரியானது குறைந்த செலவைக் கொண்டிருப்பதாலும், எளிதாக அணியக்கூடிய தொழில்நுட்பங்களாக இருப்பதால், மக்களுக்கு சிறந்த பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. AI, பல துறைகளில் பணியின் நேரமானது குறையும் தன்மை ஏற்பட்டுள்ளது. இதை , சிலர் தவறாக பயன்படுத்த கூடும் என்கிற அச்சம் நிலவி வரத்தான் செய்கிறது. ஆகையால் அறிவியல் தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்தி முன்னேற்றத்தை கொண்டு, சமூகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான புது கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )