ATVM Machine: ரயில் டிக்கெட் எடுக்க ATVM: வரிசையில் நிற்க தேவையில்லை; எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?
Rail Ticket Machine: ATVM இயந்திரத்தால் இனி ரயில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இனி ரயில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வழங்குநரிடம் இருந்து டிக்கெட் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், நாமே ATVM இயந்திரம் மூலம் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். எப்படி தெரியுமா?
எளிமையாக்கும் ரயில் போக்குவரத்து:
இந்தியாவில் போக்குவரத்தில் மிகவும் இன்றியமையாததாக ரயில்வே போக்குவரத்து உள்ளது. ரயில் போக்குவரத்தானது ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு ரயில் போக்குவரத்தானது உள்ளது. உள் மாநில போக்குவரத்து மட்டுமன்றி நகரத்துக்குள்ளாகவே ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், ரயில் போக்குவரத்தில் கட்டணமானது, விமானம் மற்றும் பேருந்து போக்குவரத்தைவிட குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு மாநரகத்துக்குள் பயணிக்கும் ரயிலை எடுத்து கொண்டால், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை இடையில் சுமார் 30 கி. மீ தூரம் உள்ளது. இங்கு ரயிலில் பயணம் பயணம் மேற்கொண்டால், கட்டணமானது ரூ. 10 ஆக உள்ளது. பேருந்தில் பயண கட்டணமானது, ரயிலைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும் ரயிலில் பயணம் செய்தால் டிராபிக் பிரச்னை இல்லை என்பதால், பயண நேரமானது மிக குறைவு. ஆகையால், பலரும் ரயில்வே பயணத்தை தேர்வு செய்வதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில், டிக்கெட் எடுக்க ரயில் நிலையங்களில், கூட்டமானது அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், டிக்கெட் எடுக்க நீண்ட நேர வரிசையில் காக்க வேண்டியதை தவிர்க்கும் ரயில்வே நிர்வாகம் ATVM என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம், நாமலே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம், டிக்கெட் வழங்குநர் உதவி தேவையில்லை.
சரி, ATVM இயந்திரத்தில் எப்படி டிக்கெட் பெறலாம் தெரியுமா?
1. முதலில் டிக்கெட் வழங்கும் இடத்தில் உள்ள இயந்திரத்தை கண்டறிந்து கொள்ளுங்கள்
2. இதற்கென்று ரயில்வே மூலம் பெற்ற ஸ்மார்ட் கார்டை, இயந்திரத்தின் சென்சார் அருகே கொண்டு செல்ல வேண்டும். ( அட்டை இல்லாமலும் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது )
3.திரையில், செல்லும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
4.ப்ரஸ் டிக்கெட் என்பதை கிளிக் செய்யவும்
5. பேமண்ட் ஆப்சனில், உங்களின் விருப்ப கட்டண முறையை தேர்வு செய்யவும்.
6. இதையடுத்து, உங்கள் கைக்கு டிக்கெட் கிடைத்துவிடும்
இந்த முறையை பயன்படுத்தி வரிசையில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்த்து பயனடையுங்கள்.