உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடம் பிடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டன் நகரில் நடைபெற உள்ளது. இதனால் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்துவது கடினம் என்று ஒரு சிலர் கருதி வருகின்றனர். ஆனால் அஸ்வினுக்கு அது அவ்வளவு கடினமான ஒன்று அல்ல. 

FOLLOW US: 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் அசத்தி வரும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.  2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் களமிறங்கினார். அப்போது முதல் இந்திய டெஸ்ட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் உருவெடுத்தார். 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் இந்திய மண்ணில் 47 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் களம் கண்டுள்ளார். இவற்றில் 286 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் அதிவேகமாக சொந்த மண்ணில் 250 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரனுடன் இவர் பகிரந்து கொண்டுள்ளார். இந்திய மண்ணில் 42 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் இந்தச் சாதனையை படைத்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஸ்வின் மீது எப்போதும் வெளிநாடுகளில் இவர் சிறப்பாக பந்துவீச வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ஆனால் அஸ்வினின் விக்கெட் தரவுகள் இதனை பொய்யாக்குகின்றன. வெளிநாடுகளில் அஸ்வின்  டெஸ்ட் 31 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அதில் அவர் 123 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு இவர் 4 விக்கெட் என்ற விகிதத்தில் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இது இந்தியாவின் சிறந்த சுழல் வீரர் அனில் கும்ப்ளேவைவிட சற்று அதிகமானது. அனில் கும்ப்ளே சராசரியாக வெளிநாடுகளில் ஒரு போட்டியில் சராசரியாக 3 விக்கெட்டிலிருந்து 4 விக்கெட் வரை வீழ்த்தினார். 

வெளிநாடுகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடம் பிடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு!

கடந்த இங்கிலாந்து தொடரின் போது தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 400ஆவது டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதன்மூலம் அதிவேகமாக டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு(72 போட்டிகள்) பிறகு  இரண்டாவது இடத்தை பிடித்தார்.டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் தற்போது வரை நடைபெற்றுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 13 டெஸ்ட் போட்டிகளில்  இவர் 67 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 14 போட்டிகளில் 70 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடம் பிடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு!

எனவே அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர் 4 விக்கெட் வீழ்த்தினால் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்து விடுவார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டன் நகரில் நடைபெற உள்ளது. இதனால் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்துவது கடினம் என்று ஒரு சிலர் கருதி வருகின்றனர். ஆனால் அஸ்வினுக்கு அது அவ்வளவு கடினமான ஒன்று அல்ல. 

அஸ்வின் இதுவரை இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் அவருடைய பந்துவீச்சு சராசரி இங்கிலாந்தில் 32.92 ஆக உள்ளது. இது நியூசிலாந்து(33), ஆஸ்திரேலியா(42.15) மண்ணில் அவருடைய சராசரியை விட அதிகமானது. ஆஸ்திரேலியாவிலேயே சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இம்முறை இங்கிலாந்திலும் சிறப்பாக பந்துவீசி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 409 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் அஸ்வின் இந்தச் சாதனையையும் படைத்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி தருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

Tags: india cricket world test championship Newzealand Ravichandran Ashwin Pat Cummins highest Wicket Taker WTC Finals

தொடர்புடைய செய்திகள்

சச்சினே டென்ஷன் ஆகிட்டாரு.... ‛நியூசிலாந்து சூப்பர்.... இந்தியா....?’  ட்விட்டரில் அதிருப்தி!

சச்சினே டென்ஷன் ஆகிட்டாரு.... ‛நியூசிலாந்து சூப்பர்.... இந்தியா....?’ ட்விட்டரில் அதிருப்தி!

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

'தோஸ்த் படா தோஸ்த்'- கோலி - வில்லியம்சன் நட்பும் கிரிக்கெட்டும் !

'தோஸ்த் படா தோஸ்த்'-  கோலி - வில்லியம்சன்  நட்பும் கிரிக்கெட்டும் !

IND vs NZ, WTC 2021 Final | நியூசிலாந்து அணிக்கு குவியும் முன்னாள் இந்திய வீரர்களின் வாழ்த்து..!

IND vs NZ, WTC 2021 Final |  நியூசிலாந்து அணிக்கு குவியும் முன்னாள் இந்திய வீரர்களின் வாழ்த்து..!

IND vs NZ, WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி தவறிவிட்ட 5 மொமெண்ட்ஸ்!

IND vs NZ, WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி தவறிவிட்ட 5 மொமெண்ட்ஸ்!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?