குவித்தது 60 ரன் ; ஓடியது 2 ரன்...லேடி சேவாக் ஷபாலி வர்மா !

இந்தியா தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான T20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சுனே லூயிஸ் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குவித்தது 60 ரன் ; ஓடியது 2 ரன்...லேடி சேவாக் ஷபாலி  வர்மா !

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ஷபாலி, 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 2 ரன்கள் மட்டுமே ஓடி எடுத்த அவர், மற்ற 58 ரன்களையும் பவுண்டரிகள் மூலமே குவித்தார். 

இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் மந்தனா 48 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. தொடர் நாயகி விருதை ஷபாலி வர்மாவுக்கும் ஆட்ட நாயகி விருது ராஜேஸ்வரி கெய்க்வாட்டிற்கும் வழங்கப்பட்டது.

Tags: indian team T20 Womens T20 India vs South Africa Lady Shewag

தொடர்புடைய செய்திகள்

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

பிரஞ்சு ஓபன்: நடாலை வீழ்த்திய ஜோகாவிச்; சிட்சிபாஸூடன் இறுதிப் போட்டியில் மோதல் !

பிரஞ்சு ஓபன்: நடாலை வீழ்த்திய ஜோகாவிச்; சிட்சிபாஸூடன் இறுதிப் போட்டியில் மோதல் !

Yasir Arafat on MS Dhoni : பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத் 

Yasir Arafat on MS Dhoni : பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத் 

Raina on Ms Dhoni : ”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது என்று” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!

Raina on Ms Dhoni : ”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது என்று” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!

WTC final 2021: 7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!

WTC final 2021: 7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?