மேலும் அறிய

‛தலைவனாக இருக்க கேப்டனாக இருக்க வேண்டியதில்லை...’ - தோனிக்கு மாஸ் ஏற்றும் கோலி!

‛‛இப்போது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அணிக்கு பங்களிக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கலாம். அணியை மேலும் வெற்றி பெறச் செய்யலாம். எனவே அதில் பெருமை கொள்ளுங்கள்’’

ஒருவர் தலைவராக இருப்பதற்கு அணியின் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோனியை மேற்கோள் காட்டி விராட் கோலி பேசியிருக்கிறார்.

‛தலைவனாக இருக்க கேப்டனாக இருக்க வேண்டியதில்லை...’ - தோனிக்கு மாஸ் ஏற்றும் கோலி!

தோனிக்குப் பிறகு இந்திய அணியின் சக்சஸ்ஃபுல் கேப்டனாக அறியப்படுபவர் விராட் கோலி. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் சிறந்த கேப்டனாக விளங்கிய விராட் கோலியை டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது பிசிசிஐ நிர்வாகம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே கேப்டனாக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த பதவியையும் ராஜினாமா செய்தார்.

சமீபத்தில் ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி  எல்லாவற்றிற்கும் நேரமும் காலமும் இருக்கிறது. நாம் அதைப்பற்றி வெளிப்படையாக அறிந்திருக்கவேண்டும். இவர் என்ன செய்துவிட்டார் என்று மக்கள் சொல்லலாம்.  ஆனால் நீங்கள் முன்னேறிச் சென்று மேலும் சாதிக்க நினைக்கும் போது, ​​உங்கள் வேலையைச் செய்துவிட்டது போன்று உணர்வீர்கள்.  இப்போது ஒரு பேட்ஸ்மேனாக அணிக்காக உங்களால் நிறைய விஷயங்களை செய்யமுடியும். உங்களால் அணியை அதிகம் வெற்றிபெற வைக்க முடியும். 

இப்போது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அணிக்கு பங்களிக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கலாம். அணியை மேலும் வெற்றி பெறச் செய்யலாம். எனவே அதில் பெருமை கொள்ளுங்கள். தலைவராக இருப்பதற்கு நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என்று கூறினார். மேலும்  தோனி அணியில் இருந்தது போன்று அவர் தலைவர் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. சில விஷயங்களைப் பெற அவரிடம் தான் அடிக்கடி செல்வோம் என்று கூறினார்.

‛தலைவனாக இருக்க கேப்டனாக இருக்க வேண்டியதில்லை...’ - தோனிக்கு மாஸ் ஏற்றும் கோலி!

கிரிக்கெட் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகியது குறித்து பேசிய விராட்கோலி, அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கான முடிவுகளை எடுப்பதும் தலைமைப்பண்பின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ள விராட்கோலி அதை சரியான நேரத்தில் செய்வது குறித்தும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு வர் அனைத்துவிதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தோனியின் தலைமையில் சாதாரண பேட்ஸ்மேனாகவும், கேப்டனாக பல போட்டிகளிலும் நீண்ட நாள்கள் விளையாடியிருக்கிறேன். எனது எண்ணவோட்டங்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்றன.

ஒருவர் தலைவனாக இருப்பதற்கு அவர் அணியின் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; இப்போது இந்திய அணியின் வீரர் இல்லை;  இப்போது ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு நிறைய பங்களிக்க முடியும். நிறைய வெற்றிகளை அணிக்கு பெற்றுத்தர முடியும் என்று தோனியை குறிப்பிட்டு விராட் கோலி பேசியுள்ளார்.

மேலும் பேசுகையில், நான் பேட்ஸ்மேனாக இருந்த போதும் என்னை கேப்டனாகவே தான் நினைத்துக்கொள்வேன். நான் அணி வெற்றிபெற வேண்டும் என்று தான் நினைப்பேன். நான் தான் எனக்கு தலைவன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

‛தலைவனாக இருக்க கேப்டனாக இருக்க வேண்டியதில்லை...’ - தோனிக்கு மாஸ் ஏற்றும் கோலி!

விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் சில ரெக்கார்டுகளை உடைப்பதற்காகவே அந்த முடிவை எடுத்திருப்பார் என்று கூறியுள்ளார். விராட் கோலிக்கு இப்போது 33 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார். அவர் பல ரெக்கார்டுகளை உடைத்து சாதனைகள் படைப்பார் என்பது உறுதி என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தோனியும், விராட் கோலியும் நட்புடனே பழகி வருகின்றனர். இருவருக்குமான நட்பை ரசிகர்கள் அதிகம் சிலாகித்து பேசிவரும் நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியிலும் தோனியுடன் விளையாடியது குறித்து விராட் கோலி பெருமையுடன் பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget