மேலும் அறிய

T20 World Cup 2026: இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள்! மழை வந்தால் என்ன நடக்கும்? ரிசர்வ் டே இருக்கா? முழு விவரம்

சூப்பர்-8 போட்டிகளும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். இந்தியாவில் நடைபெற்ற லீக் கட்ட போட்டிகள் மழையின்றி நடந்தன, ஆனால் மழை காரணமாக இலங்கையில் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 

2026 டி20 உலகக் கோப்பை அதன் அடுத்த கட்டமான சூப்பர்-8 சுற்று போட்டிகள் இன்று . இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகியவை சூப்பர்-8க்கு தகுதி பெற்றுள்ளன. லீக் கட்டத்தைப் போலவே, சூப்பர்-8 போட்டிகளும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். இந்தியாவில் நடைபெற்ற லீக் கட்ட போட்டிகள் மழையின்றி நடந்தன, ஆனால் மழை காரணமாக இலங்கையில் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 

இத்தகைய சூழ்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது அதாவது மழை காரணமாக சூப்பர் 8 போட்டி ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே இருக்குமா? என்பது அதை பற்றி கீழே காண்போம்.

சூப்பர்-8ல் ரிசர்வ் டே விதியா?

லீக் நிலை போட்டிகளுக்கு ரிசர்வ் டே இல்லாதது போல, சூப்பர் 8 போட்டிகளுக்கும் ரிசர்வ் டே கிடையாது. ஐசிசி விதிகளின்படி, ஒரு டி20 போட்டியின் முடிவு எடுக்க இரு அணிகளும் தலா குறைந்தது 5 ஓவர்கள் விளையாட வேண்டும். 5 ஓவர்கள் கூட விளையாடப்படாவிட்டால், போட்டி கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். 

சூப்பர் 8 தொடரின் முதல் போட்டி 

சூப்பர் 8 நிலை பிப்ரவரி 21 சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த கட்டத்தின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். 

ஒரு அணிக்கு எத்தனை போட்டிகள்:

சூப்பர் 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் உள்ளன. குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதனால், சூப்பர் 8 அணிகளில் உள்ள அனைத்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற தலா மூன்று போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். போட்டி இந்த முறையில் தொடரும். 

சூப்பர் 8 போட்டிகள் அட்டவணை

  • நியூசிலாந்து Vs பாகிஸ்தான் - பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 21, கொழும்பு
  • இலங்கை Vs இங்கிலாந்து - கண்டி மைதானம், பிப்ரவரி 22, இலங்கை
  • இந்தியா Vs தென்னாப்ரிக்கா - நரேந்திர மோடி மைதானம், பிப்ரவரி 22, அகமதாபாத்
  • ஜிம்பாப்வே Vs மேற்கிந்திய தீவுகள் - வான்கடே மைதானம்,பிப்ரவரி 23, மும்பை
  • இங்கிலாந்து Vs பாகிஸ்தான் - கண்டி மைதானம் பிப்ரவரி 24, இலங்கை
  • இலங்கை Vs நியூசிலாந்து, பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 25, கொழும்பு
  • தென்னாப்ரிக்கா Vs மேற்கிந்திய தீவுகள் - நரேந்திர மோடி மைதானம்,பிப்ரவரி 26, அகமதாபாத்
  • இந்தியா Vs ஜிம்பாப்வே - எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை, பிப்ரவரி 26
  • இங்கிலாந்து Vs நியூசிலாந்து - பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 27, கொழும்பு
  • இலங்கை Vs பாகிஸ்தான் - கண்டி மைதானம், பிப்ரவரி 28
  • ஜிம்பாப்வே Vs தென்னாப்ரிக்கா - அருண் ஜெட்லி மைதானம், மார்ச் 1, டெல்லி

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget