ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் அசத்திய தமிழன் ஷாரூக் கான்-யார் இவர்?

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் யார் இந்த ஷாரூக் கான்? எப்படி பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார்.  

1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஷாரூக் கான். இவருடைய தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் நடிகர் ஷாரூக் கானின் தீவிர ரசிகையாக இருந்ததால் இவருக்கு அந்தப் பெயரையே வைத்தனர். பின்னாலில் அதுவே இவரை கிரிக்கெட் போட்டியின் போது கிண்டல் செய்ய மிகவும் ஏதுவாக அமைந்தது. 13 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியில் முதல் முறையாக ஷாரூக் கான் இடம்பெற்றார். அதில் சிறப்பாக விளையாடி வந்த இவர் 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பிஹார் தொடரில் தமிழ்நாடு சார்பில் களமிறங்கினார்.ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் அசத்திய தமிழன் ஷாரூக் கான்-யார் இவர்?

இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 624 ரன்கள் அடித்து ரன் மழை பொழிந்தார். அத்துடன் 18 விக்கெட்களையும் வீழ்த்தி ஒரு ஆல்ரவுண்டராகவும் இவர் பிரகாசித்தார். எனினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனம் உடைந்த ஷாரூக் கான் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் தமிழ்நாடு அணி சார்பாக விஜய் ஹாசரே தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு டி20 அணியிலும் இவர் இடம்பிடித்தார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரிலும் களமிறங்கிய ஷாரூக் முதல் சீசனில் சரியாக விளையாடவில்லை.இரண்டாவது சீசனில் அசத்திய ஷாரூக் கான் 325 ரன்கள் அடித்து மீண்டும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரை தமிழ்நாடு அணி வென்று அசத்தியது. இதிலும் ஷாரூக் கான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் அசத்திய தமிழன் ஷாரூக் கான்-யார் இவர்?

சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வகையில் ஷாரூக் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இதேபோல் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் அதிரடி காட்டும் முனைப்பில் ஷாரூக் கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags: IPL ipl 2021 sharuk khan Punjab Kings CSK vs PBKS

தொடர்புடைய செய்திகள்

ஃபிரெஞ்சு ஓபன் 2021: 19-வது க்ராண்ட் ஸ்லாம் டைட்டிலை வென்றார் நோவாக் ஜோகோவிச்..!

ஃபிரெஞ்சு ஓபன் 2021: 19-வது க்ராண்ட் ஸ்லாம் டைட்டிலை வென்றார் நோவாக் ஜோகோவிச்..!

Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Duke Cricket Ball: 6 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஃபைனலில் வீசப்படும் டியூக் பால்..!

Duke Cricket Ball: 6 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஃபைனலில் வீசப்படும் டியூக் பால்..!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

டாப் நியூஸ்

Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Kishore K Swamy Arrested:  முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

Tamil Nadu Coronavirus LIVE News :  தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!