மேலும் அறிய
Advertisement
ஐ.பி.எல் தொடரில் சாஃப்ட் சிக்னல் முறை கிடையாது - பி.சி.சி.ஐ. அறிவிப்பு..
ஐ.பி.எல் தொடரில் நடுவரின் சாப்ட் சிக்னல் முறை நீக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாஃப்ட் சிக்னல் முறை நடைமுறையில் இருக்கிறது. சந்தேகத்துக்கு இடமான வகையில் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால், அது குறித்த தன்னுடைய முடிவை கள அம்பயர் மூன்றாவது அம்பயருக்கு தெரிவிக்கலாம்.
மூன்றாவது அம்பயர் விக்கெட்டா? இல்லையா? என்பது குறித்து பரிசீலனையில் சாஃப்ட் சிக்னலையும் ஒரு தரப்பாக எடுத்துக்கொள்வார். நடப்பு இந்திய-இங்கிலாந்து தொடரில் சில முடிவுகள் சாஃப்ட் சிக்னல் காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகியது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சாஃப்ட் சிக்னல் முறை பயன்படுத்தப்படாதென இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் நிர்வாக அமைப்புடன் கலந்தாலோசித்து இந்த முடிவை பி.சி.சி.ஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion