மேலும் அறிய

சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

தயாரிப்பாளர்களிடம் இருந்து முன்பணம் பெற்றுக்கொண்டு மற்ற படங்களுக்கு கமிட் ஆவதாக சிவகார்த்திகேயன் மீது புகார்கள் எழுந்துள்ளன

சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களிடம் முன்பனம் பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கவிருந்த படத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்க இருந்தார். ஆனால் இதனிடையில் கமல் தயாரிப்பில் சேயோன் படத்திற்கு அவர் கமிட் ஆகியுள்ளது இரு தயாரிப்பு நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தயாரிப்பாளர் நடிகர் என தமிழ் சினிமாவில் லைம்லைட்டில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது தயாரிப்பில் வெளியாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்து சேயோன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. செயோன் படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தயாரிப்பாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தயாரிப்பாளர்களை அலைகழிக்கும் சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு அயலான் திரைப்படம் வெளியானது. பணபிரச்சனையால் இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களில் படம் நடித்து தருவதாக சிவகார்த்திகேயன் முன்பணம் பெற்று அயலான் படத்தை ரிலீஸ் செய்தார். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். இப்படியான நிலையில் தான் பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பராசக்தி படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிவகார்த்திகேயனை இந்த படத்தில் நடிக்க அனுமதித்தனர். 

40 கோடி சம்பளம் போதாது 

கடந்த ஜனவரி மாதம் பராசக்தி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தபடியாக வெங்கட் பிரபு படத்தில் எஸ் கே நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சேயோன் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 60 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதே நேரத்தில் வெங்கட் பிரபு படத்திற்கு அவருக்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. 120 நாள் படப்பிடிப்பு கால்ஷீட் கேட்டார் வெங்கட்பிரபு. ஆனால் 60 நாள் நடிக்கும் சேயோன் படத்திற்கு 60 கோடி என்றால் 120 நாள் படப்பிடிப்புற்கு 40 கோடி சம்பளம் போதாது என்று கூறியுள்ளதாக சித்யா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget