மேலும் அறிய

சின்ன தல ரெய்னா.. தோனியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

சுரேஷ் ரெய்னா... சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு குட்டித் தல. இன்னும் சிலருக்கு சி.எஸ்.கே. அணியின் அடுத்த கேப்டன்.

சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனியின் நிழலில் நீண்ட காலமாக இருப்பவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என்பதால் அவருக்கு ஒரு ஃபாதர் பிகர் தேவைப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி தோனியும் தன் தம்பி போலவே ரெய்னாவை பார்த்துக்கொண்டார்.  கிட்டத்தட்ட அவருக்கு ஒரு உடன்பிறவாத சகோதரன் போல. கோலி, ரோஹித் மாதிரி ரெய்னா ஒரு பர்ஃபெக்ட் பேட்மென் என்று சொல்ல முடியாது. ஆனால் தனக்கு இருக்கும் திறமையை அணியின் வெற்றிக்கு முழுதாக அர்ப்பணித்தவர். 

சின்ன தல ரெய்னா.. தோனியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

கங்குலி, யுவராஜ் சிங் போலவே ரெய்னாவுக்கும் ஷார்ட் பால் ஆடுவதில் சிக்கல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சீக்கிரமே ஓய்வுபெற்றதற்கு அதுவும் கூட ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஆனால் விக்கெட் இழப்பதை பற்றி கவலைப்படாமல் தைரியமாக அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன். ஆரம்ப காலத்தில் கைஃப், யுவராஜ் சிங்கிற்கு சவால் விடும் விதத்தில் பீல்டிங் செய்தவர். பேட்டிங், பீல்டிங் மட்டுமில்லால் தன்னுடைய ஆஃப் ஸ்பின் மூலமாக சிக்கனமாக பந்துவீசி விக்கெட் எடுக்கும் திறமையும் ரெய்னாவுக்கு இருந்தது. 2008-இல் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமான காலத்தில் இருந்தே சி.எஸ்.கே. அணியின் ரெகுலர் வீரர்களில் ஒருவராக இருந்தவர் அவர். 

ஒன் டவுன் ஸ்பாட் என்பது அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. ஆனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அது அணி நிர்வாகத்தினருக்கு ரெய்னா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தோனியுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையால்தான் அவர் துபாயில் இருந்து கிளம்பி சென்றார் என ஊடகங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சி.எஸ்.கே. அணியின் துணை கேப்டனாக இணைந்திருக்கிறார் ரெய்னா. ஆனால், அணி நிர்வாகத்துக்கு ரெய்னா மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ரெய்னா மட்டும் இல்லாமல் இந்த முறை ஜடேஜாவும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

சின்ன தல ரெய்னா.. தோனியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

கிட்டத்தட்ட தோனிக்கு இது கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரை வெற்றியோடு வழியனுப்ப அணி வீரர்கள் முயற்சி செய்வார்கள். அதில் ரெய்னாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை. தன்னுடைய திறமையை முழுமையாக நிரூபித்து அணியில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள அவர் கடுமையாக போராடுவார். தல கோப்பையை வெல்ல சின்னத் தல என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?
ASIAN GAMES : சாதனை படைத்த சூர்யவன்ஷி... 15 வயதில் யாருக்கும் கிடைக்காத புகழ்...
ASIAN GAMES : சாதனை படைத்த சூர்யவன்ஷி... 15 வயதில் யாருக்கும் கிடைக்காத புகழ்...
Rohit Sharma: 8 ரன்னில் மிஸ்ஸான சதம்.. கொஞ்சம் கூட குறையாத ஹிட்மேன் பவர்! 92 ரன்களில் ரோகித் அவுட்!
Rohit Sharma: 8 ரன்னில் மிஸ்ஸான சதம்.. கொஞ்சம் கூட குறையாத ஹிட்மேன் பவர்! 92 ரன்களில் ரோகித் அவுட்!

வீடியோ

திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams TVK: “இந்த கோமாளி கூட்டத்த கண்டுக்காம விட்டுட்டோம்“ - தவெகவை நார் நாராக கிழித்துவிட்ட மு.க. ஸ்டாலின்
“இந்த கோமாளி கூட்டத்த கண்டுக்காம விட்டுட்டோம்“ - தவெகவை நார் நாராக கிழித்துவிட்ட மு.க. ஸ்டாலின்
Udhayanidhi:
Udhayanidhi: "ஓம் காளி.. ஜெய் காளி.. விஜய் ஒரு ஓடு..லி" முதல்வரை திட்டிய சிறுவன்.. சிரித்துப் பார்த்த உதயநிதி! குவியும் கண்டனங்கள்!
TN By Election: நாளையுடன் பரப்புரை நிறைவு.. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு தீவிரம்! ரெடியாகிய மதுராந்தகம், தாராபுரம்!
TN By Election: நாளையுடன் பரப்புரை நிறைவு.. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு தீவிரம்! ரெடியாகிய மதுராந்தகம், தாராபுரம்!
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! டாஸ்டாக் கடைகள் 4 நாட்கள் மூடல்! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! டாஸ்டாக் கடைகள் 4 நாட்கள் மூடல்! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்... ஆசிய விளையாட்டில் மேலும் ஒரு தங்கம்...
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்... ஆசிய விளையாட்டில் மேலும் ஒரு தங்கம்...
ஒடிசா டூ திண்டிவனம்... 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இரு இளைஞர்கள்
ஒடிசா டூ திண்டிவனம்... 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இரு இளைஞர்கள்
Embed widget