(Source: ECI/ABP News/ABP Majha)
Wimbledon 2021 updates: ”திரும்ப வந்துட்டனு சொல்லு” – விம்பிள்டனை வெற்றியுடன் தொடங்கிய சானியா!
மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றை அமெரிக்காவின் பெத்தானியுடன் இணைந்து வென்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, குழந்தை பிறப்பிற்கு பிறகு தனது முதல் விம்பிள்டன் தொடரில் விளையாடி வருகிறார். மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றை அமெரிக்காவின் பெத்தானியுடன் இணைந்து வென்றுள்ளார்.
And our girl begins with a bang!
— India_AllSports (@India_AllSports) July 1, 2021
Sania Mirza & Bethanie Mattek-Sands knock OUT 6th seeds Krawczyk & Guarachi 7-5, 6-3 in 1st round of Wimbledon. #Wimbledon pic.twitter.com/W9JEwfMtPY
பெண்கள் இரட்டையர் போட்டியைத் தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னாவுடன் இணைந்து இன்று விளையாடினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், சக இந்திய வீரர்களான ராம்குமார் ராமநாதன், அங்கிதா ரெய்னா ஆகியோரை எதிர்த்து சானியா, போபன்னா இணை விளையாடியது. வரலாற்றில் முதல் முறையாக, விம்பிள்டன் தொடரில் ஒரே போட்டியில் நான்கு இந்தியர்கள் நேருக்கு நேர் போட்டி போட்டுள்ளனர்.
இந்த போட்டியில், 6-2, 7-6 (5) என்ற செட் கணக்கில் சானியா – போபன்னா இணை போட்டியை வென்றது. முதல் செட் போட்டியை சானியா – போபன்னா ஜோடி வென்றிருந்தாலும், அடுத்த செட்டில் கடுமையான ஃபைட் கொடுத்தது ராம்குமார் – அங்கிதா ஜோடி. எனினும் சிறப்பாக விளையாடிய போபன்னா – சானியா போட்டியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Wimbledon:
— India_AllSports (@India_AllSports) July 2, 2021
Sania Mirza & Rohan Bopanna get the better of compatriots Ankita Raina & Ramkumar Ramanathan 6-2, 7-6 in Mixed Doubles 1st round.
Raina & Ramanathan won 💷1500 (Rs 1.5 lacs) for entering main draw. #Wimbledon pic.twitter.com/h3Pl49NHim
விம்பிள்டன் தொடரை அடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் 2021 ஒலிம்பிக் தொடரில் சானியா மிர்சா விளையாட உள்ளார்.
Wimbledon:
— India_AllSports (@India_AllSports) June 30, 2021
Mixed Doubles Draw is out. Rohan Bopanna pairing up with Sania Mirza. Their probable 2nd round opponents would be top seeds Mahut/Mladanevic.
No other Indian challenge in Mixed Doubles #Wimbledon pic.twitter.com/WXMuGCyQeK
எனினும், ரோஹன் போபன்னா ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெறாததால், கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது. இதனால், பெண்கள் இரட்டையர் பிரிவில் அங்கிதா ரெய்னாவுடன் சானியா விளையாட உள்ளார்.