IND Vs ENG: விராட் கோலி இல்லாத இந்திய அணி.. இளம்படை பயம் அறியுமோ?.. ரிஷப் பண்ட் சொல்வது என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம்படை வென்று காட்டுமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
விராட், ரோகித் ஓய்வு
எதிர்பாராத நேரத்தில் விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஓய்வு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் முறையாக சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக களம் இறங்குகிறார். அதே நேரத்தில் பேட்டிங் ஆர்டரில் கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்பதும் கேள்வியாக எழுந்திருக்கிறது. விராட் கோலி ரன் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் களத்தில் நின்றாலே எதிரணியினர் கலங்கி போவார்கள். தோல்வி பயத்தை காட்ட கூடிய அளவிற்கு அவரது அக்ரசிவான ஆட்டமும் ரசிகர்களை கவரும். கோலி இல்லாத ஆட்டத்தை அவமானமாக கருதுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
கோலிக்கு பதிலாக நான் இறங்குவேன்
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டாவிட்டாலும் தன்னால் முடிந்த உழைப்பை செலுத்தியிருந்தார் ரிஷப் பண்ட். லக்னோ அணியின் கேப்டனாக இடம்பிடித்ததில் இருந்தே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்ததை வெளிப்படுத்த காத்திருக்கிறார். அதனோடு கோலி இடத்தை நிரப்பும் வகையில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது வீரராக ரிஷப் பண்ட் களமிறங்குவேன் என அவரே தெரிவித்துள்ளார். பேட்டிங் ஆர்டர் குறித்த ஆலோசனை தான் அணிக்குள் பேசிக்கொண்டிருந்தோம். 4ஆவது வீரராக நானும், 5ஆவது வீரராக சுப்மன் கில்லும் களமிறங்குவார் என ரிஷப் பண்ட் தெரிவித்திருக்கிறார்.
சமாளிப்போம்
இங்கிலாந்து அணியில் பிராட், ஆண்டர்சன் ஆகிய பவுலர்கள் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக இங்கிலாந்து அணியை சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அவர்களும் ஃபயரோடு தான் இருக்கிறார்கள். அதற்கேற்றது போல் நாங்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். எந்த சூழலையும் சமாளிக்க தயராகிக்கொண்டு இருப்பதாக ரிஷப் பண்ட் தெரிவித்திருக்கிறார்.





















