Ashwin Tweet: வலிமை அப்டேட் கேட்டதை நினைவுகூர்ந்த மொயின் அலி..! கிண்டலடித்த அஷ்வின்..!
சென்னை மைதானத்தில்தான் ஆடியபோது ரசிகர்கள் தன்னிடம் வலிமை அப்டேட் கேட்டதை டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயின் அலி நினைவுகூர்ந்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். இந்த நிலையில், 34 வயதான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொயின் அலி ஐ.பி.எல். போட்டிகளில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அவரது ஓய்வையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயின் அலி பேசும் வீடியோ ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பேசும் மொயின் அலியிடம் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மொயின் அலி, சென்னையில் ஆடியதை மிகவும் நேசிக்கிறேன். நான் ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். ரசிகர்கள் திடீரென என்னை அழைத்து வலிமை அப்டேட் கேட்டனர் என்று கூறியுள்ளார்.
Appoveh sonnen.😂😂😂 https://t.co/WhBdu6huhA
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) September 27, 2021
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொரோனா இரண்டாம் அலைக்கு முன்பு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, சென்னையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது, எல்லைக்கோட்டின் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த மொயின் அலியிடம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் “அலிபாய் வலிமை அப்டேட்” என்று கேட்டனர். இதைத்தான், தற்போது மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார்.
மொயின் அலி பேசிய இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வின், "அப்போவே சொன்னேன்" என்று சிரிக்கும் பொம்மைகளை பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட்டை அஸ்வினிடமும் ரசிகர்கள் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Guess what are #Ajith fans asking #MoenAli about @BoneyKapoor’s #Valimai? 😎😎😎 pic.twitter.com/u13WeHXQ75
— #TutejaTalks (@Tutejajoginder) February 13, 2021
மேலும் அந்த வீடியோவில் மொயின் அலி இலங்கை அணிக்கு எதிராக தான் ஆடிய இரண்டாவது டெஸ்ட் மிகவும் பிடித்தது என்றும், அந்த டெஸ்ட் போட்டியை மிகவும் ரசித்து ஆடியதாகவும் கூறினார். அதேபோல, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஓல்ட் ட்ராபோர்டில் ஆடிய டெஸ்ட் போட்டியில் விரைவாக அரைசதம் அடித்ததும் தனக்கு மிகவும் பிடித்த போட்டி என்றும், ஓய்வு முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.