Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..
இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்கும், ஏ.டி.பி. பைனல்ஸ் என்ற ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலி நாட்டின் துரின் நகரில் கடந்த 13ம் தேதி தொடங்கியது.
அந்த வகையில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெத்வதேவ் ஆகியோர் சிவப்பு பிரிவு, ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் பச்சை பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்களும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒருமுறை மோதினர். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடங்களை பிடித்து, சிவப்பு பிரிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோரும், பச்சை பிரிவில் காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
🏆 2008
— ATP Tour (@atptour) November 20, 2022
🏆 2012
🏆 2013
🏆 2014
🏆 2015
🏆 2022@DjokerNole | #NittoATPFinals pic.twitter.com/aTm9R0nKNH
6-வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்:
தொடர்ந்து. அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸை, 7-6 (5), 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வீழ்த்தினார். இதன் மூலம், ஏடிபி பைனல்ஸ் தொடரில் 8வது முறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்போவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ஜோகோவிச், முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டு 6-3 என எளிதில் வென்றார். இதன் மூலம் 6-வது முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, மற்றொரு நட்சத்திர வீரரான பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
Let the celebration begin 🥳#NittoATPFinals | @DjokerNole pic.twitter.com/3wyUokxYkD
— ATP Tour (@atptour) November 20, 2022
ஜோகோவிச் சாதனைகள்:
முன்னதாக, 2008, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளிலும், ஜோகோவிச் ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். போட்டியில் வென்றதன் மூலம், அதிக வயதில் ஏடிபி பைன்ல்ஸ் தொடரை வீரர் என்ற பெருமையையும் 35 வயதான ஜோகோவிச் பெற்றுள்ளார். மூன்று வெவ்வேறு தசாப்தங்களில் ஏடிபி பைன்ல்ஸ் தொடரை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இறுதிப்போட்டியின் வெற்றி மூலம் 1500 ஏடிபி புள்ளிகளுடன், ரூ.38 கோடியை பரிசுத்தொகையாகவும் பெற்றுள்ளர். இதன் மூலம் டென்னிஸ் போட்டிகளில் வென்று ஜோகோவிச் பெற்ற பரிசுத்தொகை மட்டுமே ரூ.1,389 கோடியை கடந்துள்ளது.