மேலும் அறிய
Advertisement
வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் - முதல்வருக்கு மாற்றுத்திறனாளி வீராங்கனை கோரிக்கை
கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்.
மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த சங்கீதா, அரசு சட்டக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான இவர், மாநில அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்.@SRajaJourno | @CMOTamilnadu | @Udhaystalin | @mkstalin | @ptrmadurai | @mducollector | @pmoorthy21 pic.twitter.com/cAOSWglRlo
— arunchinna (@arunreporter92) March 23, 2023
இந்நிலையில், சங்கீதா இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார். ஜூலை 3 முதல் 8 வரைக்கும் கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என இந்திய பாரா ஒலிம்பிக் வாலிபால் பெடரேஷன் கடிதம் அனுப்பி உள்ளது. இதில் 50 சதவீத பணத்தை 28 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறி இருப்பதால் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் சங்கீதா பணம் செலுத்த முடியாத சூழலில் இருப்பதாகவும், தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் பேட்டி அளித்த சங்கீதா கூறுகையில், “விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட நான் கடுமையான பயிற்சிக்கு பின் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதித்தேன். தற்போது கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளேன். ஆனால் விமான டிக்கெட், விசா, நுழைவு கட்டணம் என 2 இலட்சத்து 15 ஆயிரம் பணம் கட்ட அறிவுறுத்தி உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னால் பணம் கட்ட இயலவில்லை, ஆகவே தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ; பலூன்கள் பறக்கவிட்டு கோஷம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion