மேலும் அறிய

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? - அண்ணாமலை சந்தேகம்

கிளிப்பிள்ளை போல் பலமுறை சொல்லியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. 

கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும். புதிதாக எதுவும் இல்லை, கூட்டணி பொருத்தவரை கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை. கிளிப்பிள்ளை போல் பலமுறை சொல்லியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது தி.மு.க., அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது - அண்ணாமலை பேட்டி
 
டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பி.ஜே.பி., மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார். அதில், “சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் டிஃபர்மேஷன் வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அவரது பதவி காலம் சஸ்பெண்ட் ஆகிறது. லட்சத்தீவு எம்.பிக்கும் இந்த பிரச்னை உள்ளது. பீகார் மற்றும் உத்தர் பிரதேசத்திலும் ஒரு சில எம்.பிகளுக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மாற்றி பேசுகிறார்கள். எப்படி இந்தியாவில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று உள்ளது, என்று 2019 ராகுல் காந்தி சொன்னார் என்பதற்கு தீர்ப்பு வந்துள்ளது.

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? -  அண்ணாமலை சந்தேகம்
 
ஏற்கனவே ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக அவருக்கு உணவளித்த அமேதி மக்களையே அவர் வயநாட்டில் நிற்கும்போது கேவலப்படுத்தினார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கபில் சிபலே சொல்லியுள்ளார். 

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? -  அண்ணாமலை சந்தேகம்
 
கடந்த மாதத்தில் மட்டும் ஜே.பி., நட்டா அவர்ககளை இரண்டு, மூன்று முறை சந்தித்தேன். நேற்று அமைச்சர் அவர்களை சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து ஃபீட்பேக் கொடுத்துள்ளேன். கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும். புதிதாக எதுவும் இல்லை, கூட்டணி பொருத்தவரை கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை. பா.ஜ.கவுக்கும், எனக்கும் எந்த கட்சியின் மீதும் தலைவர் மீதும் எந்தவித கோபமும் இல்லை. கூட்டணியில் இருந்தால் அது தான் தர்மம், அ.தி.மு.கவில் பலமுறை முதல்வராக இருந்துள்ளார்கள், அவர்கள் வளர வேண்டும் என்பது நினைப்பது எந்த வித தவறும் இல்லை. கூட்டணிக்குள் சின்ன சின்ன சிராய்ப்புகள் வருவது சகஜம் தான். ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியிருந்தார். அது அவர்களின் நிலைப்பாடு.
 

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? -  அண்ணாமலை சந்தேகம்
ஆன்லைன் சூதாட்டம் மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்படையில் கட்சிகள் வெவ்வேறு, அவரவர் அவரவர் வேலையை செய்கிறோம் பாஜக வேகமாக வளர வேண்டும் என்கிற முன்னெடுப்பு எடுத்துள்ளோம். ட்ரோல் வீடியோ, மீம் வீடியோக்களுக்கு இந்த அரசு வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். ஆனால் முதல்வர் ஜனநாயகத்தை பற்றி பேசுவது தான் நகைப்பான விஷயம். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு முதல்வருக்கு தகுதி இல்லை. அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை 48 ரூபாய் தமிழகத்தில் 33 ரூபாய் உள்ளது. அனைத்துமே தனியார் பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. நாசர் கனவு உலகத்தில் உள்ளார். பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம் கோட்டையை நோக்கி இதை பெரிய அளவில் எடுப்போம். இது அநியாயம் தான், அக்கிரமம் தான் ஒரு புறம் பால் விலையை ஏற்றிவிட்டு கொள்முதல் விலையை பேருக்கு கூட்டுகிறார்கள்.  மேக்கப் போட்டு இந்த அரசு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறது. மேக்கப்பை கலைத்தால் உள்ளே ஒன்றும் இருக்காது.

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? -  அண்ணாமலை சந்தேகம்
 
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸின் இருண்ட காலத்தை கர்நாடக மக்கள் பார்த்துள்ளனர். இன்னும் 45 நாட்கள் உள்ளது என்று நினைக்கிறேன். கடந்த 40 நாட்களில் பிரதமர் 11 முறை கர்நாடக வந்துள்ளார். ஆக்கபூர்வமான திட்டங்களை மத்திய அரசு திறந்து கொண்டே இருக்கிறது. காங்கிரஸின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பாஜக ஆட்சியில் வரும். இதுவரை 140 சீட்டுகளை வெல்வோம் என்று நம்புகிறேன். ஆன்லைன் ரம்மி மசோதாவில் ஏற்கனவே கவர்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவும் சிக்கல்கள் உள்ளதா என கேள்வி எழுப்பி சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தார். ஆனால் தமிழக அரசு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அனுப்புகிறார்கள். அதனால் இம்முறை கவர்னர் கையெழுத்திட்டே ஆக வேண்டும். கவர்னர் கையெழுத்திட்ட பிறகு 100% ஸ்டே தரப்படும். அந்த நேரத்தில் அரசு வருத்தப்படும் அன்று சட்ட அமைச்சர் மக்களிடம் என்ன சொல்வார் என்று தான் காற்றுக் கொண்டிருக்கிறோம். கிளிப்பிள்ளை போல் பலமுறை சொல்லியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. 

”அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பா..? -  அண்ணாமலை சந்தேகம்
ஏப்ரல் 14ஆம் தேதி ஊழல் பட்டியல் வெளியிடப்படும். சுற்றுப்பயண விவரம் கர்நாடக தேர்தலை பொறுத்து மாற்றப்படும்.  அதிமுகவினுடைய உள் கட்சி பிரச்சனை அதற்குள் நான் கருத்து சொன்னால் சரியாக இருக்கிறது. கமல் நன்றாக பேசினாலே புரியாது இதில் ராகுல் காந்தியுடன் பேசுகிறார். எனக்கு எதுவும் புரியவில்லை. மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் இணைகிறது என்று வெளியான விவகாரத்தை பொய்யான செய்தி என்று மக்கள் நீதி மையம் தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் இன்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்” என்றார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Cars Air Bags: கம்மி விலை, ஆனாலும் உயிரை காப்பாற்றும் - 6 ஏர் பேக்குகளை கொண்ட கார்கள்,  உங்க பட்ஜெட் என்ன?
Cars Air Bags: கம்மி விலை, ஆனாலும் உயிரை காப்பாற்றும் - 6 ஏர் பேக்குகளை கொண்ட கார்கள், உங்க பட்ஜெட் என்ன?
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Embed widget