மேலும் அறிய
Madurai: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ; பலூன்கள் பறக்கவிட்டு கோஷம்
இ.பி.எஸ்.,க்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டு, ஏராளமான கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள்
அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது.
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஐயப்பன் தலைமையில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.@OfficeOfOPS @OPRavindhranath #madurai @thangamagan_ops pic.twitter.com/h8kuQGHh6O
— arunchinna (@arunreporter92) March 22, 2023
இதனால் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து மதுரை வந்த ஓ.பி.எஸ்.,க்கு எதிராக அமமுக ஆதரவாளர் ஒருவர் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இ.பி.எஸ்.,க்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஏராளமான கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

முன்னதாக ஆர்ப்பாட்ட மேடையில் முன்னால் எம்.பி., கோபால கிருஷ்ணன் பேசுகையில்.." எடப்பாடி பழனிசாமி பணத்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைக்கிறார். ஒரு போதும் வெற்றி பெற முடியாது. ஆர்.கே.., நகர் தேர்தல் முதல் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரை எடப்பாடிக்கு தோல்விதான் மிச்சம். எனவே அவருக்கு காலம் பதில் சொல்லும். பதவிக்காக அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளை உடைத்துவிட்டார். இதற்கு உரிய பலனை அடைவார். கொங்கு பெல்டில் எடப்பாடியின் பெல்டையே உருகிவிட்டனர்" என கடுமையாக சாடினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வினையாக மாறிய விளையாட்டு.. மனைவி கண் முன்பே நீரில் மூழ்கி உயிரிழந்த கணவன் - திண்டுக்கல்லில் சோகம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















