PKL Tamil Thalaivas: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் இடையே இதுவரை ஆதிக்கம் செலுத்தியது யார்?
ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியும் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் இன்று சென்னையில் நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி நேற்று பாட்னாவுடன் நடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.
ஜெய்ப்பூர் - தமிழ் தலைவாஸ் இதுவரை நேருக்கு நேர்:
தமிழ் தலைவாஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் இதுவரை ப்ரோ கபடி லீக் சீசனில் மோதிக்கொண்டபோது நிகழ்ந்தது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் ஜெய்ப்பூரி் ஆதிக்கமே அதிகளவில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.
அதிக புள்ளிகளை எடுப்பதிலும் ஜெய்ப்பூர் அணியின் ஆதிக்கமே அதிகளவில் இருந்துள்ளது. இரு அணிகளுக்குமே இடையேயான ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் 41 புள்ளிகளை எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி அதிகபட்சமாக 38 புள்ளிகளை எடுத்துள்ளது.
புள்ளிகள் விவரம்:
இரு அணிகளுக்குமே இடையேயான போட்டியில் குறைந்தபட்ச புள்ளிகளாக ஒரு போட்டியில் ஜெய்ப்பூர் அணி 27 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் அணி 24 புள்ளிகளையும் எடுத்துள்ளது. கடந்த போட்டியில் பாட்னா அணியை காட்டிலும் சென்னை அணி சற்று பொருமையாக ஆடியதே தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. இதனால், கடந்த போட்டியில் செய்த தவறை சரி செய்து இந்த போட்டியில் ஆடினால் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற முடியும்.
தமிழ் தலைவாஸ் அணியில் பவார், நரேந்தர், செல்வமணி, விஷால் சாஹல், ஹிமான்ஷூ சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசாணமுத்து, லக்ஷணன், அபிஷேக், ஹூமான்ஷூ, சாகர், ஆஷிஷ், மோகித், குலியா, அமீர்ஹோசைன், பஸ்தாமி, ரோன், முகமது ரோசா, கபௌத்ரஹங்கி மற்றும் ரித்திக் ஆகியோர் ஆவார்கள்.
மேலும் படிக்க: PKL Tamil Thalaivas: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா “தமிழ் தலைவாஸ்”? - ஜெய்ப்பூருடன் இன்று பலப்பரீட்சை..!
மேலும் படிக்க: Tamil Thalaivas: கெத்து காட்ட நினைத்த தமிழ் தலைவாஸை சுத்து போட்ட பட்னா பைரேட்ஸ்; 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி