இர்பான் பதானுக்கும் கொரோனா..!
சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தை தொடர்ந்து இர்பான் பதானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றாலும், பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம் பெற விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/4E7agmuQl1" rel='nofollow'>pic.twitter.com/4E7agmuQl1</a></p>— Irfan Pathan (@IrfanPathan) <a href="https://twitter.com/IrfanPathan/status/1376575500680798209?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>





















