Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா வேண்டாம், விடுவிக்கும் மும்பை அணி..! புதிய கேப்டன் யார்? குறிவைக்கும் 3 அணிகள்
Hardik Pandya: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஹர்திக் பாண்ட்யாவை விடுவிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்தால், அவரை ஏலத்தில் எடுக்க 3 அணிகள் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.
ஹர்திக் பாண்ட்யா:
இந்தியாவின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, டி20 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். பேட்ட்ங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், உலகக் கோப்பைக்கு முன், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மிக மோசமானதாக அமைந்தது. அவரது தலைமையில் மொத்தம் களம்கண்ட 14 போட்டிகளில், வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், ஹர்தில் பாண்ட்யாவை நோக்கி விமர்சனங்களை குவித்தனர். குறிப்பாக, ரோகித் சர்மாவிற்கு மாற்றாக, பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியது.
ஹர்திக் பாண்ட்யாவை விடுவிக்கும் மும்பை அணி?
இந்நிலையில் தான், இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக, அவரை மும்பை அணி விடுவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது நடக்க வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்தாலும், அப்படி நடந்தால் பாண்ட்யாவை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க சில அணி நிர்வாகங்கள் தீவிரம் காட்டுகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி):
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து கே.எல். ராகுல் வெளியேறினால், அந்த அணி ஒரு கேப்டனையும் முக்கிய பேட்ஸ்மேனையும் இழக்க நேரிடும். இந்த சூழ்நிலையில், லக்னோ அந்த வெற்றிடத்தை நிரப்ப ஏலத்தில் ஹர்திக் பாண்ட்யவை வாங்க அதிகம் ஆர்வம் காட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்):
சஞ்சு சாம்சனுக்கு மாற்றான கேப்டனாக கருதப்படாவிட்டாலும், ராஜஸ்தான் ராயல்ஸில் (ஆர்ஆர்) ஹர்திக் பாண்ட்யா இணைவது அணிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இருக்கும். பென் ஸ்டோக்ஸ் வெளியேறும் நிலையில், RRக்கு ஒரு டைனமிக் ஆல்-ரவுண்டர் தேவை. சஞ்சு சாம்சனின் கேப்டன்சியின் கீழ் RR வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர்கள் இன்னும் கோப்பையை வெல்லவில்லை. பெரும்பாலும் சீசனை நன்றாகத் தொடங்குகிறார்கள், ஆனால் இறுதியில் தடுமாறுகிறார்கள், இதனால் பாண்டியாவைச் சேர்ப்பது முக்கிய முடிவாக இருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
பஞ்சாப் கிங்ஸின் (பிபிகேஎஸ்) முந்தைய கேப்டன்களான ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் ஆகியோரால், அணி நிர்வாகம் எதிர்பார்த்த முடிவுகளை வழங்க முடியவில்லை. சாம் கரன் விடுவிக்கப்பட்டால், பஞ்சாப் அணிக்கு கேப்டன் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டர் தேவை. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணி குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.