IPL 2023 Retention LIVE: சிஎஸ்கேவிலிருந்து பிராவோ விடுவிப்பு
IPL 2023 Retention LIVE Updates: ஐபிஎல் அணிகள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை, நவம்பர் 15 அன்று வெளியிடவுள்ளது. அதுதொடர்பாக மேலும் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
LIVE
Background
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல்(IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
ஐபிஎல் மினி ஏலம்
இந்நிலையில், அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு, வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதைமுன்னிட்டு, 10 அணிகளின் நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைக்க உள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை, நவம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள், தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ-யிடம் வழங்கி உள்ளது.
வீரர்கள் தக்கவைப்பு தினம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் லிஸ்ட்டை பிசிசிஐ அமைப்பிடம் வரும் 16ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் நடைபெறவுள்ளது. தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பே பஞ்சாப் கிங்ஸ் அணி வசம், ரூ.8.45 கோடி உள்ளது. 2022இல் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் ரூ.5 கோடி உள்ளது.
வீரர்களை விடுவித்தால் அல்லது மற்ற அணிகளுடன் வீரர்களை டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டால் மற்ற அணிகளும் தங்கம் வசம் உள்ள ஏலத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும்.
டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள்
இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் மும்பை அணிக்கும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரகுமானுல்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டிரேடிங் செய்துள்ளது.
ஜடேஜா தக்க வைப்பு
சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஜடேஜா டிரான்ஸ்ஃபர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. ஆனால், எம்.எஸ்.தோனி அவரை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதேநேரம், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை வீரர்கள் தக்க வைப்பு நாளுக்கு முன்பே சிஎஸ்கே விடுவித்துள்ளது.
கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட வீர்ர்கள்:
ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
தவான்- 8.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
அஷ்வின்- 5 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
கம்மின்ஸ்- 7.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரபாடா - 9.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
போல்ட் - 8 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர்- 12.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஷமி- 6.25 crore - குஜராத் டைட்டன்ஸ்
டு ப்ளெசி - 7 crore - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
டி காக் - 6.75 crore - லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்
வார்னர் - 6.25 - டெல்லி கேப்பிடல்ஸ்
தக்க வைக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்
- எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
- ரவீந்திர ஜடேஜா
- டெவன் கான்வே
- மொயீன் அலி
- ருதுராஜ் கெய்க்வாட்
- சிவம் துபே
- அம்பதி ராயுடு
- டுவைன் பிரிடோரியஸ்
- மஹீஷ் தீக்ஷனா
- பிரசாந்த் சோலங்கி
- தீபக் சாஹர்
- முகேஷ் செளதரி
- சிமர்ஜீத் சிங்
- துஷார் தேஷ்பாண்டே
- ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
- மிட்செல் சான்ட்னர்
- மதீஷா பதிரானா
- சுப்ரன்ஷு சேனாபதி
சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்த வீரர்கள் லிஸ்ட்
சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்த வீரர்கள் லிஸ்ட்
- டுவைன் பிராவோ
- ஆடம் மில்னே
- கிறிஸ் ஜோர்டான்
- என்.ஜெகதீசன்
- சி.ஹரி நிஷாந்த்
- கே.பகத் வர்மா
- கே.எம்.ஆசிஃப்
- ராபின் உத்தப்பா (ஓய்வுபெற்றுவிட்டார்)
சிஎஸ்கேவிலிருந்து பிராவோ விடுவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிராவோ விடுவிக்கப்பட்டார்.
மாத்யூ வேட் தக்க வைப்பு
ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ வேடை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துள்ளது.
ஃபின்சை விடுவிக்க கொல்கத்தா முடிவு
ஆஸ்திரேலியா டி20 கேப்டன் ஆரோன் பிஞ்சை விடுவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முடிவு செய்துள்ளது.