Chennai Weather: சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...சில்லென மாறும் வானிலை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Weather Updates: சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில், நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எங்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும், எங்கு அதிக வெயில் இருக்கும் என்பது குறித்தும் மற்றும் சென்னையில் நாளை வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பார்ப்போம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பறிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Likely Wet spell and Heavy Rainfall over Tamil Nadu-Puducherry and Karikal areas pic.twitter.com/bGDvMBiybl
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 10, 2025
தமிழ்நாட்டின் நாளை வானிலை:
தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read: Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: எங்கே?, சிறப்பம்சங்கள் என்ன?
12-03-2025:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-03-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து இனங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிவை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 13-03-2025 ல் 14-01-2015 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Also Read: திமுகவை வெளுக்கும் விஜய்.! வாய்வித்தையில் மட்டும் ஆடுது திமுக..திருமாவளவனை டேக் செய்த தவெக.!

