MP Jothimani :"நாகரிகம் பற்றி பாஜக பேசலாமா? அண்ணாமலையை சொல்ல சொல்லுங்கள்” ஜோதிமணி ஆவேசம்
MP Jothimani : பாஜக அரசு ஒரு லட்சம் பேருக்கு கூட கல்விக்கடன் கொடுக்கப்படுகிறதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சொல்ல சொல்லுங்கள்.

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒன்றிய அரசின் அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் அளிக்கும் முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தரையில் அமர்ந்து மனுக்களை பெற்றார் ஜோதிமணி. தொலைபேசி நுனியில் உள்ளது எந்த மொழியை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இந்திய மொழிகள் மட்டுமல்ல, எந்த மொழியும் யார் வேண்டுமானாலும் தொலைபேசியின் மூலமாக கற்றுக் கொள்ளலாம். பாஜக அரசு தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தை கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களுக்கு பேட்டி.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒன்றிய அரசின் அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் அளிக்கும் முகாம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளி ஒருவரிடம் எம்பி ஜோதிமணி தரையில் அமர்ந்து மனுக்களை பெற்று குறைகளை விசாரித்தார்.இந்நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒன்றிய அரசின் அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் அளிக்கும் முகாமை நடத்தி வருகிறோம். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் இந்த முகாமை முதன்முறையாக நடத்தி உள்ளேன். இரண்டாவது முறையாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தொகுதியில் வட்டார ரீதியாக இந்த முகாமில் எத்தனை பேருக்கு உதவி செய்ய முடியுமோ அவ்வளவு பேருக்கு உதவி செய்வோம் என்ற முயற்சிக்கு ஈடுபட்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கம் அனைத்து மாநில அரசாங்கங்களும் இன்றைக்கு சிந்திக்க வேண்டியது ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை போன்று பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துள்ளது.உலகம் வேகமாக தொழில்நுட்பத்தையும், விஞ்ஞானத்தையும், அறிவியல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற நேரங்களில் அரசாங்கங்கள் பணம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை.
இதையும் படிங்க: Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
தொலைபேசி நுனியில் உள்ளது எந்த மொழியை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இந்திய மொழிகள் மட்டுமல்ல எந்த மொழியும் யார் வேண்டுமானாலும் தொலைபேசியில் மூலமாக கற்றுக் கொள்ளலாம். பாஜக தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தை கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய பாஜக கல்வி அமைச்சர் தர்வேந்திர பிரசாத் பேச்சு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது கடுமையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமைக்காக போராடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பாஜக நாகரிகமற்றவர்கள் என்று சொல்வது கடுமையான கண்டனத்துக்குரியது. பாஜகவின் உடைய சான்றிதழ்களை நாங்கள் கேட்கவில்லை அது எங்களுக்கு தேவையும் இல்லை.தமிழ்நாடு மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராட வேண்டியது எங்களுடைய கடமை .அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் ஒரு அமைச்சர் தரம் தாழ்ந்து பேசுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியது.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர்.. கூடவே அமர்ந்து சாப்பிட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
அதை அவர் வாபஸ் பெற்றாலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகள் இடையே வாதம், பிரதிவாதங்கள் இருப்பது தான்.ஆனால் இதுபோன்று ஒன்றிய அமைச்சர் இறங்கி பேசுவது தவறு. இது தமிழ்நாட்டின் மீது பாஜகவின் வன்மத்தை காட்டுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை வெற்றிகரமாக இருக்கும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இரு மொழி கொள்கை இங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொள்கை பேர் இருந்தால் கூட இது மொழியோ அல்லது ஒரு மொழியோ கடைபிடிக்கிறது என்பது எதார்த்தம். அது போன்று பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலமே பேசத் தெரியாமல் பல பேர் இருக்கின்றனர்.
அதுபோன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை சொல்லிக் கொடுக்கலாமே. தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரையில் கல்வி கடன் வாங்கியவர்கள் அதிகமாக இருந்தனர். பா சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 14 லட்சம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் கல்விக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு ஒரு லட்சம் பேருக்கு கூட கல்விக்கடன் கொடுக்கப்படுகிறதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சொல்ல சொல்லுங்கள். எங்கு சென்றாலும் மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்காமல் திருப்பி அனுப்புவதும் வாங்கிய அவர்கள் கல்வி கடனை தனியார் நிறுவனங்களை விட்டு அடியாட்களை போல மிரட்டுவதும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது என்று சொல்வதும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.மிகப் பெரிய மோதல் போக்கை உருவாக்கி வருகின்றனர்.தமிழகம் தமிழ்நாடு அரசாங்கமும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணியும் ஒருபோதும் பணியாது. குழந்தைகளையும், மாணவர்களையும் காப்பாற்ற வேண்டிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்றார்.

