கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ்.! பேசியதை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான்.! என்ன நடந்தது?
MP Kanimozhi: மும்மொழிக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக ஒருபோதும் கூறவில்லையென்றும் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி கனிமொழி

திமுக எம்பி கனிமொழியும், தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும், பி.எம் ஸ்ரீ நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த முதலில் ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். இந்நிலையில், உண்மைக்கு புறம்பாக பேசியதாக, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸைத் கொடுத்திருக்கிறார்.
கனிமொழி கண்டனம்:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று மக்களவையில், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக பேசும்போது தமிழக அரசுடன் ஏற்பட்ட மோதல் குறித்துப் பேசினார். அப்போது சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
தமிழகத்தையும் அதன் மக்களையும் அநாகரிகமான முறையில் பேசியதற்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாகக் கண்டிக்கிறேன். திமுக மற்றும் 8 கோடி தமிழர்களின் சார்பாக, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
அவரது வார்த்தைகள் தமிழக மக்களை மிகவும் காயப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் வரி வருவாய், பணியாளர்கள் மற்றும் தேசத்திற்கான பங்களிப்புகளை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டை அவமதிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பலன்களைப் பெறுவதில் பாஜக அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அது தனது மக்களை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கனிமொழி பேசினார்.
திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான்:
இதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி உட்பட திமுக எம்.பிக்கள் கடுமையான எதிர்ப்புக்ளை தெரிவித்தனர். அந்த வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கம் செய்தார் இதையடுத்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கருத்துகளை திரும்பப் பெற்றார், ஆனால் கனிமொழியும் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் ஒப்புக்கொண்டதாகவும் பின்னர், சூப்பர் முதலமைச்சரின் பேச்சை கேட்டு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.
உரிமை மீறல் நோட்டீஸ்:
PM-SHRI திட்டம் குறித்த அமைச்சரின் கருத்துக்களைக் குறிப்பிட்டு, கனிமொழி தனது அறிவிப்பில், “அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது, மேலும் அது பொய்யானது என்று தெரிந்தும் அது மக்களவையையும், மக்களையும் தவறாக வழிநடத்தி தமிழ்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், அமைச்சரின் அறிக்கைகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களின் கண்ணியத்தையும் நேர்மையையும் களங்கப்படுத்துகிறது.
"அமைச்சரின் வார்த்தைகளும் நடத்தையும் எனது நேர்மையையும் கண்ணியத்தையும் களங்கப்படுத்துகிறது, குறிப்பாக ஒரு பெண் எம்.பி. என்ற முறையில். அவரது அநாகரீகமான கருத்துக்கள் அடக்கம் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரானது, இது சபைக்குள் சக ஊழியர்களை கண்ணியம், சமமான மற்றும் மரியாதையுடன் நடத்துவதற்கான கொள்கைகளை மீறுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் மீது சிறப்புரிமை மீறல் மற்றும் சபை அவமதிப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
Also Read: Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: எங்கே?, சிறப்பம்சங்கள் என்ன?
PM-SHRI திட்டம்:
2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-SHRI திட்டம், ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்தும் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு மத்திய அரசு நிதியைப் பயன்படுத்தி, கல்வி முறையை வலுப்படுத்த தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பிரதமர் ஸ்ரீயின் கீழ் உள்ள பணம், இத்திட்டத்தை தமிழ்நாடு மாநிலம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை வெளியிடப்படாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. இது இந்தியைத் திணிப்பதற்கான ஒரு உத்தி என்று கூறி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

