CSK vs GT LIVE Score: செல்லாக் காசான குஜராத்; 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
IPL 2024, CSK vs GT LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 26ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது. இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி கடந்த ஆண்டு கோப்பையை குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் வென்றது. இதற்கு பழி வாங்கும் விதமாக இன்று குஜராத் அணி ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இதுமட்டும் இல்லாமல், இந்த ஆண்டு சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது கேப்டன்சியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார். அதேபோல், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றுவிட்டதால், குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக அணியை வழிநடுத்துகின்றார்.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டில் ஐபிஎல் தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக பார்க்கபடுகின்ற அணிகளை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி மிரட்டலான தொடக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளின் கேப்டன்களும் இளம் வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தொடக்க ஆட்டக்காரகளாக தங்களது அணிக்காக களமிறங்குகின்றனர். இருவரும் இந்த ஆண்டுதான் கேப்டனாக அணியை வழிநடத்துகின்றனர். இருவரும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இருவரும் நேரடியாக மோதுவதால் இந்த போட்டி எதிர்கால இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றது.
நடப்பு சீசனில் இதுவரை மொத்தம் 6 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் சென்னை அணிக்கு சாதகமானதாக இருந்தாலும் குஜராத் அணி சென்னை மண்ணில் கொடியேற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என கூறலாம்.
CSK vs GT LIVE Score: செல்லாக் காசான குஜராத்; 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மடுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs GT LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்துள்ளது.
CSK vs GT LIVE Score: சாய் சுதர்சன் அவுட்!
31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் தனது விக்கெட்டினை பத்திரான பந்தில் இழந்து வெளியேறினார்.
CSK vs GT LIVE Score: 110 ரன்களை எட்டிய குஜராத்!
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.!
CSK vs GT LIVE Score: டேவிட் மில்லர் அவுட்!
டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை தேஷ் பாண்டே பந்தில் 16 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.